கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 05

கோமகன்
ஜூலை 25, 2014 12:04 முப

தேவையான பொருட்கள்

தேவையான சாமான்கள் :

கோதுமை மா 2 சுண்டு ************* .

 

ஆட்டா மா 1 சுண்டு .

 

ரவை கால் சுண்டு .

 

உப்பு ( தேவையான அளவு ) .

 

வெண்ணை அல்லது மாஜரின் 100 கிறாம் .


எண்ணை 1 லீற்ரர் .

தயாரிக்கும் முறை

பூரி

 

நான் 2010ல் இந்தியாவில் நிற்கும்பொழுது எனது மச்சினிச்சி சொல்லித் தந்தது . உண்மையில் இது எமது பாரம்பரிய சமையல் இல்லை . ஆனாலும் எனக்கு இது வித்தியாசமாக இருந்தது .
 

பக்குவம் :

 

கோதுமை மா , ஆட்டாமா , ரவை , உப்பு , வெண்ணை ஆகியவற்றை தண்ணி விட்டு இறுக்கமாக கையில் ஒட்டாதவாறு பிசைஞ்சு சிறிய உருண்டைகளாக உருட்டி வையுங்கள் . உருட்டிய உருண்டைகளை தட்டையாகத் தட்டி பூரிக்கட்டையால் வட்டமாகவோ , சதுரமாகவோ விரும்பிய வடிவங்களில் உருட்டி வையுங்கள் . தாச்சியில் எண்ணையை விட்டு நன்றாக எண்ணை கொதித்ததும் , உருட்டிய பூரியை இரண்டு பக்கமும் பொரியுங்கள் . ( அப்பளம் பொரிப்பது போல ) அப்பொழுது பூரி பொங்கி வந்ததும் பூரியை இறக்குங்கள் .

படிமானம் :

உருளைக்கிழங்குப் பிரட்டல் , பருப்பு , சம்பல் , இதில் ஏதாவது ஒன்றுடன் சாப்பிடுங்கோ . சொல்லி வேலையில்லை . 

******** சுண்டு = ரின்பால்பேணி .   
  

உபயோகிப்பதை பொறுத்தது
15 முதல் 30 நிமிடங்கள்