திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 29 ஒளியாய், ஒளிப்பயனாய்....

poomalaipalani
ஜூலை 23, 2014 05:17 பிப

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 29
ஒளியாய், ஒளிப்பயனாய்........


ஒளிமயமானவன் இறைவன் என்கிறார்கள்.


ஒளி என்கிற சொல்லுகுகு அறிவு, சுவாலை, நெருப்பு, ஜோதி, சூரியன்,சந்திரன் , தெளிவி, புகழ், கண்மணி என்ற அநேக பொருளுண்டு, அத்மையும் இறைவனுக்குப் பொருந்தும்,
அவன் - அறிவாளிஇ அன்பொளி, அழகொளி, சூரியன், சந்திரன், என்கிற முச்சுடர்க்கும் அவனே மூல ஒளி,


ஆன்ம ஒளியை அறிகின்ற மனம் அவ்வொளியில் தோய்ந்திட சிவன் விளங்குவான் என்கிறார் திருமூலர், உள்ளிருக்கும் பேரோளியை உணர்ந்தவர் உலகெங்கும் சென்றுவரும் ஆற்றலைப் பெறுவார், ( வள்ளாலார் இந்த அற்புத ஆற்றலைப் பெற்றவர்) ஆன்ம சோதியில் பொருந்திருத்தலால் அவருக்க உள்ளேயும் வெளியேயும் இருளில்லை. ஈசன் ஒரு மின்னல் கீற்றுப் போல் ஆன்மாவில் ஒளிர்கிறான், அவன் பிராணரூபமாய் விளங்கி உடலுக்கம் உள்ளத்துக்கும் ஆற்றலைத் தருவான்,


உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை
உள்ளம் விட்டு ஓரடி நீங்காஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே!
இறைவன நமது மனமண்டலத்தில் பேரோளி வடிவில் இருப்பவன், ஒருபோதும் நம் மனதை விட்டு நீங்காதிருக்கிறான். இத்தகையவனை அகந்தை, ஊழ்விணை, மாயை, காரணமாய் நாம் காணத் தவறிவிடுகிறோம்,


தன்னையறிவது ஞானம்
அறியாதிருப்பது அஞ்ஞானம்
அறியாமை காரணமாய் ஆன்மா இருளில் மூழ்கிக் கிடக்கும், ஆனால் இறை வழிபாட்டின் மூலம் அந்த இருள் நீங்கி அது ஒளிபெறும், சூரிய, சந்திரனை கண்காளாய் கொண்டவன் அக்கினியை அவனது மூன்றாவது கண்ணாகக் கொண்டவன் ( நெற்றிக்கண்)விண்வெளியும், மனிதமனமும் அவனால் ஒளிபெறுகின்றன, பேரோளியாய் விளங்குகிறது சிவம்.
சிவனை வழிபடுவதன் மூலம் ஒளியை பெருக்கி சிவத்திடம் ஒன்றுங்கள் என்கிறார் திருமூலர்


திருசிற்றம்பலம் - ஒம் நமசிவாயம்