திருமூலர் திருமந்திரம் / உபதேசம் 27 வாய்மை என்னும் மெய்பொருள்

poomalaipalani
ஜூலை 21, 2014 06:57 பிப

திருமூலர் திருமந்திரம் / உபதேசம் 27 
வாய்மை என்னும் மெய்பொருள்


எது உண்மை என்பதை அறிய எது பொய் என்பதும் தெரிந்திருக்கவேண்டும். பொய் பொருளை நீக்கித்தான் மெய்ப்பொருளை சேர முடியும்.திருமூலர் இதன் பொருட்டு கூறுகிறார்; உங்கள் மனதின் முக்குற்றங்களையும் அருள் உபதேசங்களால் நீக்கி கொள்ளு்ங்கள், தியானம் , இருண்டு கிடக்கும் உள்ளத்தை ஒளிவிட்டு பிரகாசிக்க செய்யும்.

 

மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்றன்னைப்
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந்(து) ஊழித் தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந் தின்பம் விளைத்திடும் மெய்யர்க்கே.


 

எவ்வகையிலும் வாய்மையையே பற்றி நிற்பாரோடே அளவளாவுபவன் சிவன். எவ்வகையிலும் பொய்யைப் பற்றி நிற்பவர்க்குத் தனது இருப்பையும் புலப்படுத்தாதவன் அவன். தாம் உய்தி பெறற்பொருட்டு பெறற்பொருட்டு அவனையே சார்தலால், அத்தகைய வாய்மையாளருக்கு அவன் பேரொடுக்கத்தைச் செய்பவனாக இருந்து, நிலையான இன்பத்தை எல்லையின்றி விளையுமாறு செய்வன்.


மக்கள் எதை அறிய வேண்டுேமா அதை அறிவதில்லை, அதனால் அடைய வேண்டியதை அடையமுடியாமல் போகிறது, உலகியல் சார்ந்த போக்கு பேரறிவுப் பொருளான சிவத்தை அறிய முற்படுவதில்லை, 

 

தானே உலகின் தலைவன் எனத்தகும்
தானே உலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும்
வானே பொழிமழை மாமறை கூர்ந்திடும்
ஊனே உருகிய உள்ளம்ஒன் றாகுமே.


 

சிவபெருமான் ஒருவனே உலகங்கட்கெல்லாம் முழு முதல் தலைவனும், மெய்ப்பொருளும் ஆவன். அறம் முதலிய உறுதிப்பொருள்களை உணர்த்தும் மறைகளின் வழியே அவைகள் நிலைபெறற் பொருட்டு வானம் மழைபொழியவும் கருணை கூர்வன். இவற்றை உணர்ந்து ஊனும் உருகும்படி எந்த உள்ளம் அன்பினால் உருகுகின்றதோ அந்த உள்ளம் அவனோடு சேர்ந்து ஒன்றாகும்.


சிவத்தை அறிந்து திருவடியுணர்வு கைவரப்பெற்றவர் உலகிற்கே தலைமையேற்கும் தகுதியுடையவராவர், சிவதத்துவமருளும் திறன் கொண்டவராயிருப்பர், அத்தைகயவரகளால் தான் உலகின் மழைவளம் தொடர்கிறது, இது பாடலின் உட்கருத்து


சிவன் உள்ளத்தில் கள்ளமின்றி ேபரன்பு கொள்ளும் பேரிடம் உயிர்கலந்து நிற்பான், பொய்யான பொருள்களை விரும்புவோர் தம்மளவிலும் பொய்யர் என்பதால் அவரகளை சென்றடைய கூசுவான் அவன். உடற்பற்றையும், உலகப் பற்றயையும் விட்டவர்க்கு தஞ்சம் அளிக்கிறான் சிவன். அவன் வேத முதல்வன் மூலதாரத்தில் நிைல பெற்றவன் சகஸ்ரதளத்தில் அவன் சீவனுடன் 
வேறுபாடின்றி விளங்குவான், நீங்கள் ஈேடற விரும்பினால் அவனை உணர்வால் போற்றி வழிபடுங்கள்

 

மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்றன்னைப்
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந்(து) ஊழித் தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந் தின்பம் விளைத்திடும் மெய்யர்க்கே.