வருட வழி(விழை)யும் மனதின் துளிகள்! - 5

சுந்தரேசன் புருஷோத்தமன்வருட வழி(விழை)யும் மனதின் துளிகள்! - 5அவள்புகழ்!!!
+++++++++++++++++++++++++++++++++++++கட்டும் ஒளிர் பட்டும் தழுவிட
பொட்டும் விழி வெட்டும் அணிந்திட
கொட்டும் இள குட்டிச் சிரிப்பினில்
சிலை..யா...னேன்...

+++

நட்டச் சிறு குட்டைச் செடிகளில்
மொட்டுப் பல விட்டுச் சிரிப்பதுன்
முட்டைக் கயல் கண்ணுக் கிணையென
வருமோ சொல்?!

+++கட்டித் தயிர் கொட்டிக் குடுவையில்
மத்தைத் தொட சொக்கும் கயிறது
ரப்ரப் பென இழுபட திரிபடும்
கொழுப்போ நான்....?!

+++கத்த, மிக சத்தம் என எனை
குட்டும் மிக குட்டும் விரல்களை
முத்தம் தர நித்தம் விழைகிறேன் 
வருவாய்... நீ!!!


+++++++++++++++++++++++++++++++++++++​
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்.