கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 04 ( Crème brûlée , எரியூட்டிய கறமல் புடிங் )

கோமகன்
ஜூலை 10, 2014 06:40 பிப

தேவையான பொருட்கள்

மஞ்சள் முட்டைக் கரு 5.
சீனி 100 கிறாம் .
100 வீதம் கிறீம் பால் 50 cl.
வனிலா பிஃளேவர் 1 தேக்கரண்டி .
பழுப்புச் சீனி ( மண்ணிற சீனி ) தேவையான அளவு .தயாரிக்கும் முறை

 

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 04 ( Crème brûlée , எரியூட்டிய கறமல் புடிங் )

 

நான் ஆரம்பகாலங்களில் உணவகத்தில் உதவி சமயல்காறராக வேலை செய்த பொழுது எனது செஃப் மூலம் கற்றுக் கொண்டது . இனிப்பு பதார்த்த வகையைச் சேர்ந்த இந்தப் பதார்த்தம் செய்வதற்கு மிகவும் இலகுவனது . சிறியவர் முதல் பெரியவர் வரை சாப்பிட்டதன் பின்பு விரும்பி இதைச் சாப்பிடுவார்கள் .

பக்குவம் :

ஒரு பெரிய கிண்ணத்தில் முட்டை மஞ்சள்க் கருவையும் சீனியையும் நன்றாக நுரை வரும் வரை அடியுங்கள் .

பின்பு பாலை சிறிது சிறிதாகக் கலக்கி நன்றாக அடியுங்கள் . வனிலா பிஃளேவர்ரையும் சேர்த்து நன்றாக அடியுங்கள் .

வெதுப்பியில் (oven ) வைக்கக் கூடிய கிண்ணங்களில் அடித்த கறமல் புடிங் கலவையை ஊற்றுங்கள் .

வெதுப்பியில் 100 பாகை சென்ரிகிறேட்டில் சிறிது நிமிடங்கள் வெதுப்பி சூடாக விடுங்கள் .

பின்னர் கறமல் புடிங் கலவை ஊற்றிய கிண்ணங்களை வெதுப்பியில் வைத்து ஒரு மணித்தியிலாம் வரை விடுங்கள் .

இப்பொழுது கறமல் புடிங் தயார் .

கறமல் புடிங் ஐ வெளியே எடுத்து ஓர் அகன்ற தட்டில் கிண்ணங்களை வைத்து குளிர் தண்ணீர் சுற்ரிவர ஊற்றி விடுங்கள் .

சிறிது நேரத்தின் பின்னர் கறமல் புடிங் குளிர்ந்து விடும் . மேலும் கறமல் புடிங் ஐ குளிரப்பண்ண குளிரூட்டியில் ஏறத்தாள 2 மணித்தியாலங்கள் வைத்து விடுங்கள் .

பளுப்புச் சீனியை கறமல் புடிங்கில் தூவி விட்டு , சிறிய காஸ் சுவாலாயால் சூடேற்றுங்கள் .

பளுப்புச் சீனி உருகி மண்ணிறமாகப் படை போல வரும் . பின்பு சாப்பிடுங்கோ . ( சிலிண்டருடன் கூடிய சிறிய காஸ் சுவாலை ) .

படிமானம் :

மாலை வேளைகளில் இதைச் சாப்பிட்டுக் கொண்டு தெருவை  விடுப்புப் பாக்கலாம் .


*** இதற்கு எனக்குச் சரியான தமிழ்ப் பெயர் தெரியவில்லை .


 

1-5 நபர்கள் வரை
1 முதல் 1:30 மணி வரை