திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 22 இறங்கத்தக்க நிலை

poomalaipalani
ஜூலை 09, 2014 06:08 பிப

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 22
இறங்கத்தக்க நிலை


மனிதன் தன்னுடைய அழிவை நோக்கி விரைந்து செல்கிறான். தன் வாழ்வை மாற்றும் விதியை அவன் வலிந்தேற்கிறான்.

" விரும்பியோ விரும்பாமாலோ வினைகள் குவிகின்றன. தெரிந்தோ, தெரியாமலோ அந்த வினைகள் அவனை தேடிக் குவிக்கின்றான். மனிதர்கள் வினையை விதைக்கிறார்கள்,

அவர்களுடைய சரீர நாற்றாங்காலில் அந்த விதைகள் முளைத்து நாற்றுக்களால் தலை நிமிர்கின்றன.

பின்பு விளைந்து பலனை அவர்கள் அறுவடை செய்யத்தயார் ஆகிறார்கள்.

காலம் நில்லாது. அது ஒடிக்கொண்டே இருக்கும்,வாழ்நாள் திடீரென்று முடிந்து விடும். இந்த உண்மையை உணராமல் அவர்கள் வாதிடுகிறார்கள், வாதிட்டு பெறுவது எனன?


நாம் வாழும் குறுகிய காலத்ததிலேயே இறைவனிடத்தில் அன்பால் பொருந்தும் நெறியை அறிந்திருக்க வேண்டும்.

அன்பால் பொருந்தும் நிலையை அறிந்திருக்க வேண்டும்,

ஆனால் புரிந்து கொள்ளும் திறனற்றவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள், சரீரத்தை போற்றுவதில் தாங்கள் முழுக்கவனத்தையும் செலுத்துகிறவர்கள் அறிவார்களா?

அந்த சரீரம் விறகுக் கட்டைகளுக்கு விருந்தாக போவதை இந்த விறவி நமக்கு இறைவனால் வந்தது ஆனால் அவனை மறக்கின்ற காரியத்தையே நாம் செய்து கொண்டு இருக்கிறோம்,

இறைவனின் திருவடியைப் போற்றாத காரணத்தால் பெறற்கரிய இன்பங்களை நாம் பெறாமலே போகிறோம்.
குரு காட்டும் வழியில் சென்றால் சிவனை காணக்கூடும், ஆனால் அதற்கெல்லாம் நமக்கு நேரமில்லை, நேர்த்தியற்றவை களை நேர்த்தியானதாய் பேசித்திரவோம்,

இறைவனின் சிறப்புகளை நாம் எப்போதேனும் எண்ணி பார்த்திருப்போமா?

களியாட்டங்களில் காலத்தை வீணடிப்பவர்கள் கண்டடைந்த பலன் எது?

சிவபொருமான் தன் அன்பர்களின் மனத்தில் சோதியாய் உணர்ந்தெழுவான்.

நாம் அவனை திருஐந்தெழுத்தால் தொழுவரவேண்டும். அல்லாவிடில் எதுவும் கட்டுப்பாட்டில் இருக்காது.

இரங்கத்தக்க நிலையில் நாம் இருப்பதாய் எண்ணி வருந்துகிறார் திருமூலர்


தென்னாடுடைய சிவனே போற்றி .....

திருசிற்றம்பலம்