திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 20 (அ) எந்தையும் தாயும் - எந்தையாகிய சிவன்

poomalaipalani
ஜூலை 04, 2014 09:36 முப

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 20 (அ)
எந்தையும் தாயும் - எந்தையாகிய சிவன்


எந்தையாகிய சிவனிடமிருந்தே தோன்றின சைவமார்க்கங்கள், இந்த மண்ணுலகம் அவனால் தோற்றுவிக்கப்பட்டது. அவன் பேரறிவாளன் அவனுடைய பெருமைகளை யாரும் அளவிட்டு உரைக்க முடியாது. அவன் ஆதிபரம் பொருள் அது என்றும் இது என்றும் ஐயப்பட வேண்டாம், ஆராய்ச்சி வேண்டாம், அவன் தனது அடியார்களின் அன்புக்கு ஆட்பட்டு வெளிப்படுகிறவன். எங்கும் நறைந்த இறைவன,ஒவ்வொர் உயிரின் உள்ளத்திலும் தங்கியிருப்பவன், ஆனாலும் தன் இருப்பை அவன் மறைவாகவே வைக்கிறான், அதனால் உலகோர் அவன் செயல்படும் வகையை அறிந்திருக்கவில்லை.


சிவத்தை காட்டிலும் எங்கும் நிறைந்த மேலான பொருள் இல்லை. ஆன்மாவில் உறையும் சிவத்தை அறிந்து சிவானுபவம் பெறுவதே தவம். இவவுண்மை அறியாது சமயத்துறையில் புகுந்து சிறக்க முயல்வது வீண்முயற்சி என்கிறது திருமந்திரம், பாடல்: சிவம் அல்லது இல்லை அறையே சிவமாம்...............


உலகின் கீழான நெறி சென்று துன்புற்று ஒழுகுவாரும் நல்ல நிலையில் இருந்து அதனை இழந்து வருந்துவோரும் சிவத்தை நினைத்து அருந்தவம் மேற்கொண்டால் இன்னல்கள் நீங்கும், சிவன் அவர்களுக்கு பெரியதகுதியைத் தந்தருள்வான். பாடல்: இருந்தழுவாரும், இயல்பு கெட்டாரும்.................


ஈடேறும் எண்ணம் உங்களுக்கு இருந்தால் ஒப்பில்லா தலைவனை உண்மை நெறியில் ஒழுகும் அடியார்கள் அன்பனை இன்பம் தருகின்ற முதல்வனை வந்தடைவீராக என்கிறார் திருமூலர்,


ஒளிவிடும் மின்னல்போல, சிவபொருமான் யோகக் காட்சியினருக்கு ஒளிவடிவில் வெளிப்படுவான், அந்தணர் இயற்றும் வேள்வித் தீயில் முகங்காட்டுவான், அவன் முழுமுதற் கடவுள், நீங்கள் எவ்வுருவில் நினைத்தாலும் அவ்வண்ணமே காட்சியளிப்பான், பாடல் : மினற்குறிாளனை வேதியர்...................


உடலெருத்த பயன் சிவனை அறிவாதாகும், ஆனால் மக்கள் இதனை உணர்ந்தாரில்லை,ஆகாயத்தை ஆறு ஆதாரங்களில் இயங்க வைத்தான் இறைவன், அவன் தன்னோடு பொருந்திருப்பதை சீவனறியவதே மேலான சமயம். பாடல் : அறியவொண்ணாதவ்வுடம்பின் பயனை...............


இந்த உலகில் நான் வீடுபேற்றை அடைவதற்கு சாதனமாய் அமைந்தது இப்பிறவி. எனக்கு பிறவியளித்து இறைவன் என்னுள் இருந்து வெளிப்பட்டான், அவனைக்கண்டு கொள்வதற்கான ஞானத்தையும் அவன் தந்தான், அடையும் முயற்சியில் என் உள்ளம் என்க்கு துணை நின்றது என்கிறார் சித்தர். பாடல்: பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை................


சீவனுடன் சிவன் பொருந்திருப்பதை பலரும் அறிந்திருக்கவில்லை. உயிர்கள் அறியாத வகையில் அனைத்துயிர்களையும் தன் கருவில் கொண்டவன் சிவன் நான் அதனை அறிந்து கொண்டேன், பாடல்: தரிக்கின்ற பல்லுயிர்க்கெல்லாம் தலைவன்...............


இறைவன் அருளால் என்னுள் அன்பு ஓங்கியது, அந்த அன்பின் வழியே அவன் அன்புருவாய் எழுந்தான், அப்போதே மேல்நோக்கி ஏறிய செவ்வொளி சிரசில் படர்ந்தது. நான் விரும்பிய திருவடி என்உள்ளத்தே நிறைந்தது என்கிறார் திருமூலர், அன்பின் திறம் அத்தகையது பேரறிவு பொருளான அவன் என்கிற சிவம் , சிற்றறிவு பொருளாகிய தான் என்கிற ஆன்மா என இரண்டு உள்ளன. தன்னையும் அவனையும் தன்னொளியில் கண்டு, தான் என்கிற உணர்வை அவன் விளங்கும் சகஷ்கரதளத்துக்கு மாற்றினால் வேறுபாடின்றி நானே அவன் என்கிற நிலை வரும், பாடல் : தான் என்று அவன் என்று இரண்டாகும் தத்துவம்........................


பாதையில் முள் இல்லை, பக்கத்தில் உண்டு, பாதைவிட்டு விலகினால் முள் குத்தும், இறைவன் நல்ல பாதையையும் நெருஞ்சயில் முள்ளையும் பக்கம் பக்கமாய் வைத்தான் நாம்தான் பார்த்து நடக்க வேண்டும், அறவழி தவறினால் துன்பத்தை அனுபவிக்க வேண்டியதிருக்கும். பாடல்: நெறியைப் படைத்தான் நெஞ்சில் படைத்தான்..........


சிவத்திடம் மனது வைத்த பண்பாளர்கள் துன்பங்களில் அஞ்சுவதில்லை. அவர்கள் வேறுபடுத்தி அறியமாட்டார்கள் பாடல்: ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்..........


சிவனது அருள்பெற்றவர் அறிவார், இவ்வுலகம் ஏன் படைக்கப்ட்டது , உடலோடு உயர் எதற்காக இணைக்கப்பட்டது தவத்தின் மேன்மை எத்தகையது என்பதெல்லாம், அவரவர் தவத்தை பொறுத்தே அவன் தெரிவதும், மறைவதும் புறக்கண்ணால் காணமுடியாது போகலாம், அகக்கண்ணால் காண்பது ஆகுந்தானே! உலகமே சிவனது அடையாளம் உலகனைத்தும் சிவனிடம் உள்ளமையால் உலகமே சிவலிங்கமாயிற்று. 


சிவன் - உருவம், அருவம், அருவுருவம் என்று மூவகை திருமேனியைக் கொண்டவன், உயிர்களுக்கு குருவாய் தோன்றி அருள்பவன், அவனே சதாசிவமாய் கற்பக்தருவாய் வேண்டுவோருக்கு வேண்டுவன அருள்பவன், சோதிவடிவான இறைவனின் ஒருபாதியில் பராசக்தி விளங்குகிறாள், சிவசக்தி விளையாட்டே இவ்வுலகம் வடிவான சக்தி அறிவான சிவன், இரண்டும் இல்லாமல் உடலுக்குள் உயிர் பொருந்தி நிற்பதில்லை, இந்த மேலோனின் திருவுருவத்தை தெரிந்து அறியாமையால் இதுவரை காலங்கள் வீணில் கழிந்தன. அந்நிலையில் சிவனாகிய தலைவன் குருவாக வந்து காட்டுவித்தனன், ெம்ய்யறிவு துணையாய் கொண்டவரை மேவியிருப்பான் சிவன். பாடல் : தேர்ந்த அறியாமையின் சென்றன காலங்கள்...........


தவத்தின் பயனாய் இருப்பவனை, தவம்செய்வார்க்கு நலம் செய்பவனை கடந்து விளங்கும் தூயவனை நாடுங்கள், அவ்விதம் நாடினால் எண்ணற்ற ஆன்மாக்களில் உங்களை மேம்பட்டவராக்குவான், சிவனது திருவடியை உணர்ந்தவர், உணர வேண்டியது வேறு ஏதுவும்இல்லை. சிவத்தின் விருப்பதிற்கு இணங்க சக்தி செயல்படும், சிவன் முச்சுடர்களையும் ஒரு சுடராக்கி ஒளிரச் செய்கிறான், 
உடலுறவால் வந்த தாயும், தந்தையும் உற்பத்திக்கு காரணம் என்கிற மயக்கத்தை விட வேண்டும், உண்மையான தாயும் தந்தையும் அந்த சிவசக்தியே ஆகும், 


திருமூலர் மேலும் கூறுகிறார், " பெற்ற தாயும் தளந்தையும் தங்கள் காதலுறவில் விளைந்த இவ்வுடல் மீது அன்பு வைத்தனர், உயிரைக் கண்டன்று, ஆனால், சிவனும் சத்தியும், உயிருக்குயிராயினர், நாங்கள் ஒன்றுபட இருந்ததில் அவர்களை நான் உணரமுடிந்தது, என்னை ஒருபோதும் பிரியாத அம்மையையும் அத்தனையும் வணங்கி அவர்களது அருளை பெற்றேன் " என்கிறார்,.


திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாய ஓம்


மேலும் பல ஆன்மீக தேடலுக்கு .....
http://vpoompalani05.wordpress.com
http://poomalai-karthicraja.blogspot.in
http://poompalani.weebly.com