கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 03 ( கல்லு றொட்டி )

கோமகன்
ஜூலை 03, 2014 08:08 பிப

தேவையான பொருட்கள்

கோதுமை மா 1 கிலோ .
தேங்காய் 1 .
பச்சை மிளகாய் 7 அல்லது 8 .
சின்னவெங்கயம் 250 கிறாம் .
உப்பு தேவையான அளவு 

தயாரிக்கும் முறை

பக்குவம் :

கோதுமை மாவை பைக்கற்ருடன் நீராவியில் அரை மணித்தியாலம் அவிக்கவும் . அவித்த கோதுமை மாவை அரிதட்டில் சூட்டுடன் போட்டு அரிக்கவும் . அரித்த மாவை ஒரு சட்டியில் போட்டு வைக்கவும் . தேங்காயை உடைத்து துருவி வக்கவும் . சின்னவெங்காயத்தை சுத்தப்படுத்தி வைக்கவும் . பச்சை மிளகாயையும் , சின்னவெங்காயத்தையும் குறுணியாக வெட்டி சட்டியில் உள்ள கோதுமை மாவுக்குள் போடவும் . துருவிய தேங்காய்பூவையும் கோதுமை மாவுடன் சேர்த்து உப்பும் கலந்து தண்ணியும் கலந்து றொட்டிக்குப் பிசைவது போல் பிசையவும் . நன்றாகப் பிசைந்த மாவை அரை மணித்தியாலம் ஊறவைக்கவும் . இப்பொழுது கலந்த கலவை , எல்லாவற்றுடனும் சேர்ந்து பெரிய உருண்டையாக இருக்கும் . உருண்டைய சிறிய உருண்டைகளாகப் பிரிக்கவும் .( 1 கிலோ மாவில் 7ல் இருந்து 8 சிறிய உருண்டைகள் செய்யலாம் . ) உருட்டிய உருண்டைகளை ஒரு கோப்பையில் வைத்து வட்டமாகத் தட்டி எடுக்கவும் . தோசைக்கல்லை அல்லது Non stick pane ஐ அடுப்பில் வைத்து கல்லு சூடாகியவுடன் , ஒவ்வரு தட்டிய றொட்டியையும் இருபக்கமும் மாறிமாறி பிரட்டி பொன்நிறமாகும் வர வேகவிடுங்கள் . கல்லுறொட்டி தயார் . விறகு அடுப்பில் வைத்து செய்யும் பொழுது இதன் சுவை இன்னும் அதிகமாகும் . இந்தக் கல்லு றொட்டி பருத்தித்துறைப் பகுதியில் பிரபல்யமானது .


*** தண்ணி = சுடுதண்ணி ( தவறு திருத்தப்பட்டுள்து )
 

1:30 முதல் 2 மணி வரை
1-5 நபர்கள் வரை