உன் மௌனம் அழகான கவிதை - நாகூர் கவி

நாகூர் கவி
ஜூலை 02, 2014 04:28 பிப

அடி பெண்ணே...
உன் தொண்டைக்குள்
வார்த்தைகள்
சிக்கெடுப்பதின் அர்த்தம்
புரியவில்லை எனக்கு...!வார்த்தைகள் நோன்பிருப்பது
உன்னிடம் தான்...
விழிகள் தவம் செய்வதும்
உன்னிடம் தான்...


தினம் ஒரு கவிதை தருகிறது
உன் மௌனம் எனக்கு...

எதுகை மோனை எப்பொழுதும்
என்னிடம் அடம் பிடிக்கிறது
உன் பெயர் அருகில்
அதை எழுதச் சொல்லியே...!