காதல் வந்தால்

நாகூர் கவி
ஜூலை 02, 2014 03:53 பிப

இரும்பான மனங்களை
துரும்பாக்கி விடும்
கரும்பான மணம் கொண்டு
இனிப்பாக்கி விடும்...!


தேவதைகளின் தேடலிலாவாய்
கவிதைகளின் பாடலாவாய்
உன் மனத் திரையில்
அரங்கு நிறைந்த காட்சிகள்
அவளது திருவுருவமே...!



நேரம் தவறியோ வந்தால்
சுண்டு விரலைக் கடிப்பாய்
வாரம் ஒருமுறையோ வந்தால்
சுருண்டு விழுந்து வரத்தை கேட்பாய்...!


அவள் உன் காதலின் பிம்பமானால்
நீ கவிதைகள் வடிக்கும் கம்பனாவாய்
காதல் வந்தால் ஆனந்தமே
இனி கனவுகளும் ஆரம்பமே..!