காதல் ஞானியாவேனா....?

நாகூர் கவி
ஜூலை 02, 2014 03:50 பிப

அழகு ரோஜாக்களின்
ராணுவ அணிவகுப்பு...
என்னவள் கூந்தலில்
சூடிட காத்திருப்பு!


ரோஜாவும் தினம் துதிப் பாடும் 
அவள் காலடியில் ஜதிப் போடும்...!

வரும் வழியெல்லாம்
பெரும் உபசரிப்பு...
அவள் மேனியில் உரச
வீதியில் தென்றல் ஆர்ப்பரிப்பு!


அவள் கவிதைகளால் செதுக்கிய
காதல் கலைவாணி...
அவளை கரம் பிடித்தால்
நான் காதல் ஞானி!