கனவிலே கலக்கிய பாஞ்சாலி சபதம்

chinnamb
ஜூலை 02, 2014 03:00 பிப

 

(பாரதியார் எழுதிய பாஞ்சாலி  சபதத்தில்

த்ரௌபதியை துச்சாதனன் சபைக்கு இழுத்து வரும்போது வீமன் கூறுவது பா 182)

இது பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டு வா

கதிரை வைத்திழந்தான் அண்ணன்

கையை எரித்திடுவோம்

வீமன் கூறி முடிக்கும் முன்னேயே

சீற்றத்துடன் அவையில் நுழைந்தாள்

துச்சாதனன் மனைவி, வேலேந்திய தாதியர் படை சூழ

நிமிர்ந்த நன் நடையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாமல்.

தடுக்க வந்த புல்லியர் கூட்டத்தை

புழுதி செய்ய முனைந்தனர் தாதியர்

துச்சாதனன் மனைவி கூறலாயினள்

 “துச்சாதனன் மனைவி நான்

ஊரவர் கீழ்மை எமக்கில்லை,வீரமில்லா நாய்களல்ல நாஙகள்

கயவன் ஒருவனை கை பிடித்தால்

அவன் காரியம் யாவினுற் க்கும் கை  கொடுக்க முடியுமா?

தீமையில் அண்ணனை வென்றவன் கல்வி

எள்ளளவும் இல்லாதவன்

பேயென்று ஒதுங்குவர் நல்லோர்

இவனைக்கண்டால்.

நாணுகிறேன் இவனுடன் வாழ்ந்த்தை எண்ணி ;

எரிக்கப்பட வேண்டியது என் கணவனின்

கையும் தான் அவையினில் பிறன் மனைவியை

துகிலுரித்த கொடியோனுடன் இனி நான் வாழேன்

இதோ கொடுத்தேன் எரிதழல் என்று வீமன்

கையில் வைக்குமுன்னே துச்சாதனன்

கையினை எரிதாள் வீமனிடம் தள்ளினாள்

சூது கவ்விய தருமம் வெல்ல ஆண்டுகள் பல

வேண்டாம்.இங்கே இன்றே இப்பொழுதே

வீமா,இவன்

தொடை பிளந்து உயிர் மாய்ப்பாய்

,கடைப்பட்ட தோளையும் பிய்ப்பாய்

ஆனால் குடிக்க முடியாது அவன் இரத்த்தை,.

அவன் உடலில் ஓடுவது

இரத்தமல்ல நச்சு கலந்த சாக்கடை

அது உனக்கும் வேண்டாம் த்ரௌபதி

முடிக்கும் வேண்டாம்”

“நன்று செய்தாள்” என

சாட்சி உரைத்தன பூதஙகள் ஐந்தும்

நாமும் கதை முடிதோம்

இந்த நானிலமுற்று நல்லின்பத்தில்  வாழ்க

(தொலைக்காட்சியில் பாஞ்சாலி சபதம் கன்ட நான் தூங்கியபின் கன்ட கனவு இது ..,பாரதியார்  கவிதை வரிகள் கலந்துள்ளன (அவை அடிக்கோடிட்டு கட்டப்பட்டுள்ளன

).மன்னிப்பு வேண்டுகிறேன் வியாசரிடமும் பாரதி யிட மும்)