"ஓடுகிற ஓட்டமெல்லாம்..!!"

சீர்காழி சபாபதி
ஜூன் 28, 2014 09:35 முப

உழைத்துக் களைத்து
களைத்து உழைத்து
நிதமும் வாழ்க்கை ஓட்டம்!

<3

நேற்றுபோய் இன்றாகியும்
இன்றுபோய் நேற்றாகியும்
நாளையும் தொடர்கின்ற ஓட்டம்!

<3

எதைத்தேடி எதற்காக
எதுவாகவேண்டி எதனால்
எதைமாற்ற எல்லையற்ற ஓட்டம்!

<3

உருண்டோடுது கலைத்தோடுது
உலகில் நம்மை இழுத்தோடுது
உயிரை மறந்த ஓட்டம்!

<3

இன்னல்தொடர்ந்து இன்பம்துறந்து
இதயம் துடியாய்துடிக்க
இரவும்பகலும் இம்சைகளின் ஓட்டம்!

<3

வாழ்ந்தது இரணமானால்
வாழ்வது மருந்தானால்
வருங்காலம் வசந்தமாகி சுகமாகும்!

<3

வீழ்வதில் அறிந்து
வாழ்வதில் உணர்ந்து
வழிகளை செய்தால் வெற்றிவரும்!

<3

செயலில் நிதானித்து
சரிவில் கண்கானித்து
செயல்பட எல்லாம் சிறப்புதரும்!

<3

புன்னகை உதட்டில்வைத்து
பொன்னகை மனதில்வைத்து
பழகிட அனைத்தும் உறவாகும்!

<3

அன்பாக வாழ்ந்தால்
பண்பாக இருந்தால்
அற்புதம் வாழ்வில் நிகழ்ந்துவிடும்!

<3

உணர்வின் ஆட்டத்தை
உயிரின் ஓட்டத்தை
உற்று நோக்கிட வாழ்வுவரும்!

<3

வாழும்வாழ்க்கை விருப்பமானால்
வாழும்முறைமை மருந்தானால்
வாழ்வே உயிரின் விருந்தாகும்!

<3 <3 <3