எதி்ர்பார்க்கும் வாழ்வு

கன்னிகா
ஜூன் 18, 2014 12:42 பிப

   நேற்றைய  பலவீனங்கள்

    நாளை நம் வாழ்க்கையின்   

   வெற்றிகளூக்கு அடித்தளங்கள்

 

  இன்றைய வாழ்க்கைமுறை

 நேற்றைய பரிமானங்களின்

  தொடர்ச்சியாய் வந்தவையே

 

   நாளையக் கனவுகளே

  அடுத்தடுத்து விடியல்களின்

  எதிர்பார்ப்புத் தோரனைகள்

 

   அன்றையக் காலச்சுவடுகள்

  அடிமனதில் மறக்க முடியாத

  நினைவலைத் தோட்டங்கள்

 

  என்றையக் காலத்திலுமே

  மனிதத்தை வாழவைப்பது  

  உண்மையுள்ள நேயங்களே

 

   நாளை வாழ்க்கையே

   நிம்மதி நிறைந்தி௫க்கும்

  என்ற எதி்ர்பார்ப்பில்................