தமிழனெற்று சொல்லத்தயங்கும் "தன்"மானத்தமிழா!

சீர்காழி சபாபதி
May 14, 2014 10:51 பிப

தமிழிலேயே பெயர் வைப்போம்!
நம் பிள்ளைகளுக்கு..
தமிழை இழக்காமல் கொடுப்போம்!
நம் சந்ததியருக்கு..

குழந்தைக்கு முதலில்
தமிழமுது ஊட்டுவோம்!
குழந்தையின் முதலமுதம்
தமிழாக இருக்கட்டும்!

பாட்டி சொல்லும் கதைகள்
பைந்தமிழாக இருக்கட்டும்!
பேத்தி பாடும் பாடல்கள்
செந்தமிழாக தவழட்டும்!

பணம் சம்பாதிக்க
பத்துமொழியும் கற்கட்டும்!
குணம் சம்பாதிக்க
தாய்மொழியை அறிந்திடட்டும்!

சுயமாக சிந்தித்திட
சொந்தமொழி வேண்டுமடா!
தன்மானம் வளர
தாய்மொழி தேவையடா!

ஏட்டறிவு பட்டம்பெற
எழுத்தறிவு வேலைபெற
கல்விகேள்வி பெற
செந்தமிழைத் திற!

தமிழை யாரும்
தாழ்த்திடவும் முடியாது!
தமிழை யாரும்
மறந்திடவும் முடியாது!
'டமில'ரென்று சொல்லிக்'கொல்லும்'
நம்மைத் தவிர...