தமிழ் நண்பர்களே!... உதவுங்கள் உடனடியாக!...

சீர்காழி சபாபதி
May 14, 2014 09:47 முப

அடடா! பரிசு போட்டியாமே! போட்டியாமே!
என் சொக்கா! என் சொக்கா!
மூவாயிரம் ரூபாவும் என் சொக்காவுக்கு வருமா?... சொக்கா! என் சொக்கா!

ஒன்னு, ரெண்டு, மூனு.... மூவாயிரும் ரூபாயாச்சே! சொக்கா! என் சொக்கா!
முப்பது நூறாச்சே! மூவாயிரும் ரூவாயாச்சே சொக்கா! என் சொக்கா!

முதல்ல கவிதை எழுதரத பத்தி யோசிப்போம்! எதப்பத்தி எழுதலாம்...
நம்மகிட்ட இல்லாத சரக்கா! தங்கமாவும், வைரமாவும் அள்ளிவிடலாமே!...
.
.
.
(யோசிப்பு!)
.
.
.
.
.
.
(கொஞ்சம் நீண்ட யோசிப்பு!)
.
.

அகர முதல... (அட! அழகாவருதே) ஆதி பகவன்... அச்சச்சோ! இது திருக்குறளாச்சே!
அறம் செய்ய விரும்பு! ஆறுவது... அடபோடா! இது ஆத்திச்சூடில்ல!
யாதும் ஊரே யாவரும் கேளீர்! தீதும் நன்றும்... அய்யகோ! இது புறநானூறுல்ல!
யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும்.. அடங்.....க! இது குறுந்தொகைப்பா!
இப்புடி எல்லாதயும் எனக்கு முன்னாடியே எழுதிட்டு பெய்டிங்களே!
அட சொக்கா...  நான் என்ன செய்வேன்? நான் என்ன செய்வேன்?
தமிழ் நண்பர்களே! யாராவது புத்தம் புதுசா,
சொல்புதிதா, பொருள்புதிதா கவிதை வைச்சிருந்தா,
இன்னைக்கி ஒரு நாள் மட்டும் கடன் குடுங்களேன்...
நாளைக்கு திருப்பி அப்படியே பத்திரமா தந்திடறேன் ... கொஞ்சம் சீக்கிறம்!
உங்கள் நண்பன், உங்கள் அன்பன் ...
உங்க எல்லாரையும் நம்பி காத்திருக்கேன் ...