" எழுத்துப் பூக்கள்..!! "

சீர்காழி சபாபதி
May 11, 2014 08:14 பிப

 

அன்பின் பிறப்பிடத்தை
சொல்லிவிடுகிறது
மழலையின் புன்னகை!

@}- ~@~@~@~@~@~@~@~@~@}-

மொழியின் இனிமையை
புரியவைத்துவிடுகிறது
குழந்தையின் மழலை!

@}- ~@~@~@~@~@~@~@~@~@}-

இயல்பே அழகென்பதை
உணர்த்திவிடுகிறது
பிஞ்சுவின் வெற்றுடம்பு!

@}- ~@~@~@~@~@~@~@~@~@}-

மகிழ்ச்சியின் உச்சத்தை
தொட்டுவிடுகிறது
கள்ளமற்ற சிரிப்பு!

@}- ~@~@~@~@~@~@~@~@~@}-

உணர்ச்சிகளின் தாக்கத்தை
வெளிப்படுத்திவிடுகிறது
மழலையின் நடத்தை!

@}- ~@~@~@~@~@~@~@~@~@}-

வளர்ந்தவர்களின் கர்வத்தை
உடைத்துவிடுகிறது
சிறுவர்களின் பேச்சு!

@}- ~@~@~@~@~@~@~@~@~@}-

வாழ்வின் அர்த்தங்களை
விளக்கிவிடுகிறது
பிள்ளைகளின் விலையாட்டு!

@}- ~@~@~@~@~@~@~@~@~@}-

விலையாட்டின் குதூகலத்தை
காட்டிவிடுகிறது
குழந்தைகளின் உற்சாகம்!

@}- ~@~@~@~@~@~@~@~@~@}-

வெகுளித்தனத்தின் உச்சத்தை
காட்டிவிடுகிறது
பிஞ்சுகளின் நட்பு!

@}- ~@~@~@~@~@~@~@~@~@}-

பெற்றோர்களின் உலகத்தை
புதுப்பிக்கிறது
பிள்ளைகளின் புதுமைகள்!

@}- ~@~@~@~@~@~@~@~@~@}-

அன்பின் வேர்களை
நீரூற்றிக்காக்கிறது
வெள்ளைமனதின் வார்த்தைகள்!

@}- ~@~@~@~@~@~@~@~@~@}-

மனிதற்களுக்கு மனிதத்தை
அறிமுகப்படுத்துகிறது
மழலைகளின் உலகம்!