சத்தமின்றி ஒருயுத்தம்!

சீர்காழி சபாபதி
May 11, 2014 12:57 பிப

பித்தமாகி நித்தம் நானும்
வித்தமின்றி தவிக்கிறேன்
கொத்தமின்றி தத்தம் நீயும்
சித்தம் சிறக்க தந்திடு! <3

வித்தமெல்லாம் வெறுமையாகி
மொத்தமாக மத்தமாகி
சத்தமின்றி தவிக்கிறேன்
அத்தம் கொண்டு அனைத்திடு!<3

சத்தமின்றி யுத்தம் செய்தேன்
தித்தம் தீர வந்திடு!
பித்தம்போக அருகில் வந்து
முத்தம் நீயும் இட்டிடு!<3