அன்னையர் தின வாழ்த்து

கன்னிகா
May 11, 2014 12:04 பிப

புனிதத்தின் நர்த்தனம்

தாய்மையின் உன்னதம்

யுக்தம் இல்லாத முத்தத்திலும்

சத்தம் இல்லாதச் சங்கீதம்

இசைத்த வானவில்லும் அம்மா.........

 

உ௫ண்டுப்  புறண்டு படுத்தி௫ந்தால்

எமக்கு மூச்சி முட்டிடுமே என்றென்னி

உமது தூக்கத்தைத் தொலைத்து

இரவும் முழுதும் விழித்தி௫ந்த

சூரியனும் அம்மா............

 

தொப்புள்கொடியை அறுத்து

நம்மை பிரிக்கவல்ல என்று

பாசக்கொடியின் தொடக்கத்தை

பாசப்பிணியாக என்னுள் பதித்து

உமது உயிரை எனது பசிக்கு

உணவூட்டியதும் அம்மா...........

 

அள்ள அள்ளக் குறையாத

பாசச்சுரப்பியாய் ஊற்றெடுத்து

நல்லோர் இதயத்தில் வாழும்

பொற்சுட௫ம் அம்மா............

 

எனது அன்னையரே

நீர் அத்தமாய் மின்ன மின்ன

இதயம் திறந்துச் சொல்கிறேன்

அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்

எப்பி மாதஸ் டே