எதிரும் புதிரும்!...

சீர்காழி சபாபதி
May 08, 2014 09:26 முப

@}- <3 @}-
மேடு பல்லம் இருந்தால்தான்
நீர் நீர்விழ்ச்சி ஆகும்!
எதிரெதிர் துருவம் சேர்ந்தால்தான்
மின்சாரம் பயன் கொடுக்கும்!
@}- <3 @}-
ஆண் பெண் எதிரெதிர்தான்
அன்பு வீரம் பிறந்திடத்தான்
ஆண் பெண் ஒன்றினால்தான்
அழகிய வாழ்வு சிறந்திடுமே!
@}- <3 @}-
ஒன்றுக்கொன்று எதிரெதிராவதெல்லாம்
ஒன்றை ஒன்று எதிர்பதற்கில்லை!
ஒன்றை ஒன்று ஈர்த்து
ஒன்றோடு ஒன்றாகத்தான்!
@}- <3 @}-
எதிரெதிராகவே வாழ்ந்திடாமல்
புரிந்து உணர்ந்து இணைந்தே
வாழ்வை சிறப்பாக நடத்தி
வாழ்வின் அற்புதங்களை வெல்வீர்!

@}- <3 @}-