அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

தமிழ்
பிப்ரவரி 12, 2012 11:34 பிப

அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

உறவுகள் தொலைவில் இருந்தால் எப்போதாவது சந்திக்கும் போது அவர்களிடத்தில் சண்டை குறைவாக இருப்பதையும், பக்கத்தில் இருக்கும் உறவுகளிடம் எப்போதுமே பழக வாய்ப்பு இருப்பதால் அடிக்கடி ஏதும் பிரச்சனை வருவதையும் அன்றாடம் நாம் காணலாம். 

அதே போலவே, எப்படிப்பட்ட உறவானாலும் கொஞ்சம் மரியாதை கொடுத்து நடத்தினால் பிரச்சனை வராமலும் நெருங்கி வர வர மரியாதை இல்லாமல் போவதால் சில நேரம் பிரச்சனை வருவதையும் காணலாம்

இதையே அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. என்ற பழமொழி உணர்த்துகிறது.