என் அன்பு உறவுகளே ....!!!

கவிப்புயல் இனியவன்
ஏப்ரல் 07, 2014 03:38 பிப

என் அன்பு உறவுகளே ....!!!

வார்த்தையால் வர்ணிக்க முடியாத உணர்வு நம் தமிழ் உறவுகளின் உயிர் நட்பு ..ஆதராவும் ...!!!

அதேபோல் உங்களின் என் மீதான அன்பிற்கும் கவிதைக்கும் நீங்க தரும் பேர் ஆதரவு என்னை மெய் சிலுக்க வைக்கிறது ,....!!!

என் உயிர் உறவுகளே ....!!!

கவிதை என்பது ஒரு ஆத்மாவான செயல் இதனை
ஒரு பொழுது போக்குக்குத்தான் எழுத ஆரம்பித்தேன் ஆனால் இன்று என் ஆத்மாவாக மாறி வருகிறது அதை உருவாக்கியது உலக என் ரசிகர் தரும் பேராதரவுதான் ....!!!

என் உடன் பிறப்புக்கள் இருக்கும் தமிழ் நாட்டு மக்கள் அவர்கள் தரும் ஆதரவு ...புலம் பெயர்ந்தது இருக்கும் என் தாயக மக்கள் ...டென் மார்க் ..லண்டன் ..பிராஞ்ச் ...ஜெர்மனி ..அமேரிக்கா ...
அரபு நாடுகள் ...மலேசிய ..சிங்கப்பூர் ...இன்னும் சொல்லிக்கொண்டே போகும் பலநாட்டு ரசிகர்கள்
அனைவருக்கும் என் தலை சார்ந்த வணக்கங்கள் ..!!!

உங்களின் தனி பட்ட மடல்கள் வந்து மலைபோல் குவிகிறது அனைவருக்கும் என்னால் தனிப்பட்ட முறையில் மீள் பதில் வழங்க முடியாததற்கு மிக
வருத்தம் அடைகிறேன். அதனால் இந்த பொது
அறிவிப்பதை நான் எழுதும் தளங்களிலும் என் முக நூலிலும் பிரசுரிக்கிறேன் ....!!!

என் உயிர் உறவுகளே ...!!!

என் கவிதைகள் உங்களுக்கு ஆத்தம திருப்தியாக இருக்கிறது என்று பலர் கூறுகிறீர்கள் .உண்மைதான் நானும் ஆத்மா உணர்வொடு எழுதுகிறேன் ..என்னை பொறுத்தவை இலக்கண இலக்கிய பண்புகளை விட யதார்த்தத்தை விரும்புகிறேன் அதுவே நம் எல்லோரையும் கவர்கிறது ....!!!

அன்பு உறவுகளே
ஆதரவுக்கும் உதவுகின்ற மனப்பாங்குக்கும் மிக்க‌ நன்றி

என்றும் உங்கள் நட்புக்கு ஏங்கும்
உங்கள் கவி
கே இனியவன்