அரிசிமாவுப் புட்டு

pandima
மார்ச் 24, 2014 12:04 முப

தேவையான பொருட்கள்

அரிசி மாவு ..................  ஒரு கப்

உப்பு .......................... தேவைக்கேற்ப

சீனி ........................... 1/4 கப்

தேங்காய்த்துருவல்............ 1/4 கப்   

 

தயாரிக்கும் முறை

அரிசி மாவில் தேவையான அளவு  சிறிது சிறிதாக சுடு நீர் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து கெட்டி பிடித்துவிடாமல் உதிரியாக கிளறி வைக்கவும்

இட்டலிச் சட்டியிலோ புட்டுக் குழாயிலோ கொஞ்சம் மாவையும் கொஞ்சம் தேங்காய் துருவலுமாக மாறிமாறி போட்டு அவித்தெடுக்க சுவையும் மணமுமாக புட்டு ரெடி.

அழகான கிணணியில் புட்டைப் போட்டு சிறு கரண்டியோடு தந்தால் ஆசையா சாப்பிடுவார்கள். இதில் முக்கியமாக கவனிகக வேண்டியது புட்டு மிருதுவாக இருக்க , கிளறிய மாவு சிறு கட்டிகளாக திரண்டு இருந்தால் புட்டு சற்று விரைப்பாகி விடும். அதனால் கிளறிய மாவை மிக்சி சின்ன ஜாரில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு ஒரு சுற்று மட்டும் சுற்ற விட்டு எடுத்தால் மாவு உதிரியாகவும் பொலு பொலுப்பாகவும் இருக்கும். அதன் பிறகு அவித்தெடுத்தால் மிருதுவாக இருக்கும்.

 

புட்டுக்கு கூட்டாக பழம், அப்பளம், அவித்த பயறு, கொண்ட கடலை கூட்டு அல்லது சீனி இவை சுவையாக இருக்கும்

செய்து பாருங்கள். பிறகு என்ன ? பாராட்டுதான். எப்பபடி இருந்துச்சுன்னு எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கப்பா.....ப்ளீஸ்.........

இன்னமும் சொல்கிறேன்............

5 முதல் 15 நிமிடங்கள்
உபயோகிப்பதை பொறுத்தது