மூத்திரம்

கல்யாண கண்ணன்
மார்ச் 22, 2014 04:19 பிப
 

      இருபத்தைந்து கிலோமீட்டர் தூரம் உள்ள கல்லூரிக்கு தினமும் வருவது சலிப்பாகதான் இருந்தது. ஆனால் அவள் அதற்கு பழகியிருந்தாள். இவர்கள் ஊர்தான் பேருந்து கிளம்பும் இடம் என்பதால் இருக்கைக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. காலை நேரம் என்பதால் பள்ளி ,கல்லூரி மாணவர்கள் தான் அதிகம். ஓட்டுநர் இருக்கையில் இருந்து மூன்றாவது இருக்கை அவளுடையது. அதுவும் சன்னல் ஓரம். பேருந்து வடவன்பட்டியை தாண்டியதும் களைகட்டிவிடும். அதிலும் அந்த பாலமுருகனுடைய சீனபோனில் பாடும்பாடல் ஏகபிரபலம். பாடல் வரிசை எல்லாநாலும் ஒன்றுதான். நாளுக்கு ஒன்று மட்டுமே புதுப்பாடல். அதன் சப்தம் கல்யாணத்தின் பொழுது ரேடியோ குழாய் அருகில் நிற்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்தும். சன்னல் ஓரமென்பதால் அவளிடம் கேட்காமலே பிறரது நோட்டுகள் அவள்மடியில் குழந்தைகள் போல தவழ ஆரம்பித்தன.அரளிகோட்டை தாண்டியதும்தான் அவள்முகம் மாறதுடங்கியது. 

     அவள் தன் கால்களை குறுக்குவதும் சற்று விரிப்பதும் என பிறர் கவனிக்காதவாறு செய்துகொண்டிருந்தாள்.அவளின் விருப்பத்திற்குறிய சன்னல் ஓரபயனத்தின் காற்று இன்று வெறுப்பாகவே இருந்தது. காலையில் தண்ணீர்கூட குடிக்கவில்லையே என்று யோசித்தவாறு வந்தவளை திருப்பத்தூர் இன்னும் பன்னிரெண்டு கிலோமீட்டர் என்ற அறிவிப்பு பலகை அது பங்கிற்கு அவளை எரிச்சல் அடையசெய்தது. அவள் முகம் மாறுவதை கவனித்த அகிலா என்னடி என்றாள்.

ஒன்றும்மில்லை....  எள்ளும் கொள்ளும் வெடிப்பதுபோல்

இல்லையே....

ஒன்றுமில்ல…

பின்ன ஏன்டி ஒருமாதிரி இருக்க

அவள் மெதுவாக அகிலாவின் காதில் முனுமுனுத்தாள்.

பொறுடி கொஞ்சதுரம் தான்...

 

      ஆனால் அவளது வாக்கை அரசாங்க இயந்திரம் பொய்யாக்கியது. பாவம் அதென்ன செய்யும் வயது இயந்திரத்தின் வேகத்தையும் குறைத்துவிடுகிறது. அவள் தன் வலதுகாலை மற்றொன்றின்மீது வைத்து அளித்திகொண்டே வந்தாள். பாலமுருகனின் பாடல் அவளை கேளிபன்னுவது போலதோன்றியது.

கைவிரல்களை மடக்கவும் விரிக்கவும் என ஆசுவாசபடுத்திகொண்டாள். ஒருவழியாக அவர்கள் அண்ணாசிலை வர அரைமணி நேரம் ஆகியது. போக்குவரத்து நெருக்கடியின் காரணமாக அனைவரும் அண்ணாசிலையிலையே இறங்கநேர்ந்தது. பேருந்து நிலையம்மென்றல் பிரச்சனையில்லை. இரண்டு பக்கமும் ஒரேதுரம்மென்பதால் அகிலாவும் அவளும் வேறுவழியின்றி நுறடிதள்ளியிறுக்க கல்லூரி நோக்கி நடக்க ஆரம்பித்தனர். 

அவள் அவள் அளவில் வேகமாகவும் பிறர் பார்வையில் மெதுவாகவும் நடக்க ஆரம்பித்தாள். அவள் முகத்தில் வேர்வைத்துளிகள் புல்லில் தெரியும் பனிபோல அங்அங்கே தெரிய ஆரம்பித்தது. நகரத்தின் வளர்ச்சி அவளை வெறுப்படைய செய்தது. இதோ இந்த கழிப்பறை இருக்குமிடம் முன்பு கருவைகாடம். கருவைகாடவே இருந்துறுக்கலாம் அப்பொழுதே அது அதற்க்குதான் பயன்பட்டது. ஆனால் இப்பொழுது அதில் பூட்டுதான் தொங்குகிறது.

திருநெல்வேலி பூட்டாகதான் இறுக்கவேண்டும் என்று நினைத்துகொண்டே நடந்தவளை அந்த கழிப்பறையில்லாத பள்ளியின் மாணவர்கள் சாலையின் ஓரத்தில் மூத்திரம் பெய்ததுகொண்டிருந்தது அவளை மேலும்  ஆத்திரம்மூட்டியது.

தன் உடலமைப்பை நினைத்தவாறே தன் நடையை சற்று அதிகபடித்தினாள். எதிரில் வரும்யாரையும் அடிக்கவேண்டும் போல் தோன்றியது. எந்தொரு கட்டிடத்திலும் கழிப்பறை இருபதற்காண அடையாளம் தென்படவில்லை. அவர்களுக்குதான் சாலையோர புளியமரம் இருக்கிறதே. காளை தூக்கவேண்டிய அவசியம்மில்லை. 

ஒருசிலகடைகளில் இருக்கும் பெண்களைபற்றி யோசித்தவாறு அகிலாவும் பிறர் பார்வைபடாத இடம்தேடி தோற்றவளாக அவளுடன் நடந்தாள். ஒரு வழியாக இருவரும் கல்லூரியை அடைந்த பொழுதுதான் நிம்மதி. அந்த கழிப்பறையின் நாற்றம் அவள் இதுவரை அடைந்த எரிச்சலை ஒருசேர அவள் முகத்தில் காட்டியது. அரசாங்க உதவிபெறும் கல்லூரியில் கழிப்பறை எப்படியிறுக்கும். அதாவது இருக்கிறதே...!

கழிப்பறையை விட்டு வெளியே வந்தவளை பார்த்த அகிலாவுக்கு சற்றுமுன் மலர்ந்த மலரை பார்ப்பது போன்றிருந்தது.

 

ப.கல்யாண கண்ணன்