என்னுயிர் மன்னவன்

vaishu
பிப்ரவரி 05, 2014 04:01 பிப

 

 

சாய்ந்து நான் விழும்போது
தாங்கியவனே - என்மனக்
குறிப்பறிந்து நம்பிக்கை
தந்தவனே- என்
இல்லாள் நீயென இதயத்துடிப்பிற்கு
ஒருமுறை சொன்னவனே...

நினைவில் இருந்து நான்
அகன்றுவிட்டேனோ...
சடுதியில் நீ எனை
மறந்துவிட்டயோ...

சுவாசத்தில் நம் காதலை
நெஞ்சில் நிறைத்தேனே - என்னுள்
வைத்திருக்கும் உன்னை விடுவிக்க
நிறுத்தவேண்டும் என் சுவாசத்தை.

உன் பிரிவில் நான் விடுவது
கண்ணீர் அல்ல..
என் உயிர்

 

         - வைஷ்ணவ தேவி