தமிழகத்தில் அது கர்ம வீரர் காமராஜர் ஆட்சி காலம்.
அப்போது தமிழகத்தில் அரசாங்க மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் திருவாசகமணி கே எம் பாலசுப்ரமணியம் அவர்கள். நல்ல பேச்சாளரும் திருவாசகத்தில் நல்ல அறிவும் உடையவர்.
ஒருமுறை ஈவே ராமசாமி உலக சுற்றுப்பயணம் போக வேண்டிய நிலையில் அவருக்கு மொழி பெயர்ப்பாளராக கே எம் பாலசுப்ரமணியம் அவர்கள் ராமசாமியுடன் சென்றிருந்தார்.
ஒரு ஊரில் ராமசாமி பேசவேண்டியிருந்தது.
அவர் தமிழில் வழக்கம் போல கடவுளை திட்டியும் நாத்திகம் பற்றியும் உரக்க பேசிக்கொண்டிருந்தார்.
ராமசாமி பேசப்பேச பாலசுப்ரமணியம் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேடையில் பேசிக்கொண்டிருந்தார்.
கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் மிகவும் உற்சாகமாய் கை தட்டி ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தனர். ராமசாமி அவர்களுக்கோ உற்சாகம் தாங்கவில்லை. பேச்சு சூடுபிடித்து மேலும் உற்சாகமாய் பேச ஆரம்பித்தார்.
ஒரு வழியாக பேச்சு நிறைவடைந்தது.
ராமசாமி அவர்கள் பாலசுப்ரமணியம் அவர்களிடம் கேட்டார்,
நான் இதை தமிழகத்தில் பேசினால் அடிக்க வறானே, ஆனால் இங்கே இவ்வளவு வரவேற்பு கொடுத்து கை தட்டி கேட்டார்களே, இங்கே நாத்திகம் நல்லா வளர்ந்திருக்கே
என ஆச்சரியப்பட்டார்.
பாலசுப்ரமணியம் ஈவெராவை பார்த்து சிரித்துக்கொண்டே சொன்னார்,
நீங்க பேசினதில ஒரு வார்த்தை கூட நான் மொழி பெயர்க்கல.
அப்புறம் என்ன பண்ணின? ஈவே ராமசாமி கேட்டார்
நீங்க பாட்டுக்கு பேசிக்கிட்டிருந்தீங்க, நான் என் பாட்டுக்கு ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தேன் என்றாராம்.
ராமசாமி அசடு வழிந்தார்.