ஊடல் 6

பவித்ரன்
பவித்ரன் சிறப்பு பதிவு
October 12, 2013 05:06 பிப


  அன்று அவள் குரலிலிருந்து கோபத்தை சுமந்து வந்த அதே வார்த்தைகள்,இன்று ஒருவித ஏக்கத்தையும் குழைவையும் காதலையும் சுமந்து,என் காதுகளை இலக்காக கொண்டு வந்தடைந்தது,உடனே நான்

  "இல்லீங்க....அது வந்து..." என்று சொல்வதற்குள் என்னை இடைமறித்து

  "ப்ச்...,தெரியும்..,உன் சூழ்நிலைதானே,நீ உடனே என்ன லவ் பண்ணனும்னு சொல்லல,உனக்கு எப்ப தோனுதோ அப்ப சொல்லு,அதுவரைக்கும் நான் உன்ன லவ் பண்ணிட்டுதான் இருப்பேன்"

என்று கூறினாள், இப்படியாக உரையாடிக்கொண்டே நாங்கள் தேநீரை அருந்தி முடித்தோம்.

  பின்பு அவள் பின்னால் வண்டியில் ஏறி அமர்ந்துகொள்ள அது பறந்தது,அப்போது அவள் அணிந்திருந்த துப்பட்டா என் முகத்தை தழுவியது,அந்த நொடி என்னுள் ஏற்பட்ட இராசாயன மாற்றம் என் மூளையை தாக்கியது,மேலும் அவள் கூந்தலும் துப்படாவுடன் போட்டியிட்டுக்கொண்டு என் முகத்துடன் விளையாடிக்கொண்டிருந்தது, அப்படியிருக்கையில் மெல்லிய தாமரை இதழ்களைப் போன்ற அவளின் காதுமடல்கள் இரண்டும் என்னை பித்துகொள்ளச்செய்தன,நான் அப்படியே கண்மூடி மெய்மறந்து அமர்ந்திருந்தேன்,பின்

   "தினேஷ்......" என்ற குரல் கேட்டு விழித்தேன்,ஸ்ரீ  

   "என்ன மயக்கமா....!?"

   "அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க....."

   "சரி.....,நாளைக்கு பாக்கலாம் டியர்.....!"

   "என்னங்க இது டியர்ன்னு....."

   "ஏன்,கூப்பிட்டா என்ன?,என்ன பொருத்தவரைக்கும்,நீ என்னோட டியர்தான்..,நான் அப்படிதான் கூப்பிடுவேன்" என்று சிணுங்கினாள்.

 இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் அந்த வழியாக வந்த இரண்டு பேர் அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்,

   "டேய் மச்சி,யார்டா இந்த குட்டி......!"

   "தெரியல மச்சி,வா ட்ரை பண்ணலாம்..."

 பிறகு நேராக எங்களிடம் வந்தவர்களில் ஒருவன் ஸ்ரீயின் இடுப்பை தடவினான்,உடனே ஸ்ரீக்கு சுர்ரென்று கோபம் வந்தது,வண்டியிலிருந்து எழுந்து "பளார்" என்று ஒரு அறை வைத்தாள்,அவன் கண்கள் பொறி கலங்கின,பின் அவனின் கோபம் தனது எல்லையை கடக்க எத்தனித்தது,அவனது ஒட்டுமொத்த கோபமும் வெளிப்படுமாறு பதிலுக்கு ஸ்ரீயை அவனது ஆற்றலனைத்தையும் திரட்டி "சலீர்" என்று ஒரு அறையை பதித்தான்,அவ்வளவுதான் அவள் சுருண்டு வந்து என் மடியில் விழுந்தாள்,அதைக்கண்டதும் எனக்குள் தேக்கி வைத்திருந்த ரௌத்திரம் வெடித்துச்சிதறியது,ஸ்ரீயை அருகிலிருந்த ஒரு சுவற்றில் சாய்த்துவிட்டு ,நேராக அவனிடம் சென்று அவன் கழுத்தை இறுக்கப்பிடித்தேன்,உடனே அருகிலிருந்தவன் ஒரு கத்தியை எடுத்து என் கழுத்தை தாக்க எத்தனிக்கையில், காற்றைப்போல சீரி வந்த கத்தியை தடுத்து அவன் வயிற்றிலும்,வாயிலும் பலமாக குத்தினேன்,இன்னொருவன் என்னை தாக்க எத்தனித்தபோது அவனையும் பலமாக தாக்கி இருவரையும் அவள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து பின் விரட்டினேன்,அடிவாங்கியதில் ஸ்ரீயின் கண்களில் கண்ணீர் துளிர்த்திருந்தன,அந்த மின்னும் கண்களோடு என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்,என்ன நினைத்தாளோ தெரியவில்லை நான்,

    "அழாதீங்...."

என்று சொல்லி முடிக்கும் முன்பாக,சடாரென்று என் இதழ்களை கவ்வினாள், அவைகளை அவள் தேனிதழ்களுக்குள் வைத்து பூட்டிக்கொண்டாள்,நான் திணறிக்கொண்டிருக்கும் போதே சர்ரென்று என் இதழ்களை உறிஞ்ச ஆரம்பித்தாள்,எங்களுக்குள் இருப்பது ஊடல் என்பதை மறந்து எங்கள் இதழ்கள் நானகும் கூடலில் லயித்திருந்தன,இந்த செய்கையால் என் உடல் முழுவதும் ஒருவித போதை பரவியது,என் இதயம் நிமிடத்திற்கு 180 முறை துடிக்க ஆரம்பிதத்து,என் கண்கள் தானாக மூடிக்கொண்டன,இவ்வாறு நான் இன்பத்தில திளைத்துக்கொண்டிருக்கும் போது,மெல்ல என் இதழ்களை விடுவித்தவள்,

   "ஐ லவ் யூ, தினேஷ் " என்று கூறிவிட்டு அவளே தொடர்ந்தாள்.

   "பை தினேஷ்...,நாளைக்கு பாக்கலாம்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

   அன்று இரவு முழுவதும் எனக்கு உறக்கமே வரவில்லை,அவளின் நினைவாகவே இருந்தது,இறுதியில் என் மனம் அவளை என்னையும் மீறி விரும்புவதை என்னால் உணரமுடிந்தது,

  "சரி....,இந்த ஊடலை காதலாக மாற்றி விட வேண்டியதுதான்" என நினைத்துக்கொண்டே உறங்கிப்போனேன்,காலையில் "கிரீரீஈங்ங்....." என்று அலறிய அலாரத்தை சமாதானபடுத்திவிட்டு எழுந்தேன்,இன்று அவளிடம் காதலை சொல்லப்போகிறோம் என்ற எண்ணமே என்னை மிதக்க வைத்தது,அதற்காக இரண்டு முறை குளித்து விட்டு,நல்ல ஆடையாக எடுத்து அயர்ன் செய்து அணிந்து கொண்டேன்,ஷூவுக்கு அழகாக,பார்த்தால் என் முகம் தெரியும் வண்ணம் 'பளபள' வென பாலீஷ் போட்டுக்கொண்டேன்,போகும் வழியில் ஒரு வெள்ளை ரோஜா ஒன்றை வாங்கிக்கொண்டேன்,பேருந்தில் ஏறி அலுவலகம் செல்லும் வழியில் ஸ்ரீ ஒரு பஞ்சர் கடையில் நின்று கொண்டிருந்தாள்,அதைக்கண்டதும் நான் உடனே பேருந்தைவிட்டு இறங்கினேன்,இறங்கியதும்,

   "ஸ்ரீ.......!..,"என்று அழைத்தேன்,அவள் தன் கண்களை அகல விரித்து,ஒரு வித மிரட்சியாக என்னை பார்த்துக்கொண்டே "ஏய்.....!" எனும் போது என் காதுகளில் "பா..........ம்" என்ற ஒலி வந்து விழுந்து எழுந்து ஓடியது,அப்போதுதான் நான் சாலையின் நடுவில் நின்றிருப்பதை உணர்ந்தேன்,சுதாரித்துக்கொண்டு ஒலி எழும்பிய பக்கம் திரும்ப எத்தனித்தபோது சடாரென்று 20 அடி தூரம் ஒரு லாரியால் தூக்கி எரியப்பட்டேன்,அப்படி வீசப்பட்டு சென்று விழுந்ததும் என் தலை அதிரடியாக பூமியுடன் மோதியதில் தலையிலிருந்து இரத்தம் 'குபுகுபு' வென வெளியேற ஆரம்பித்தது,அதுமட்டுமல்லாமல் என் உடல் முழுவதும் இரத்த வெள்ளத்தில் மிதந்தது,அதில் நான் வாங்கிச்சென்ற வெள்ளை ரோஜா சிவப்பு ரோஜாவாக மாறியிருந்தது,இதைக்கண்டதும் ஸ்ரீ இடிந்து போனாள்,ஒரு புயலைப் போல ஓடி வந்து என்னை தன் மடியில் ஏந்திக்கொண்டு 'ஓ....' வென கதற ஆரம்பித்தாள்,நான் என் ஊடலை காதலாக்க வந்து, முடியாமல் ஊடலாகவே நிறுத்திக்கொள்ளும்படி நேர்ந்துவிட்டது.

  "டேய்.....,தினேஷ் இங்கப்....."
  
   என்று ஸ்ரீ கதறிக்கொண்டிருக்கும்போதே என் உயிர் உடலிலிருந்தும்,ஊடலிலிருந்தும்விடுபட்டிருந்தது.


                                                                                                                      -முடிந்தது.