ஊடல் 5

பவித்ரன்
பவித்ரன் சிறப்பு பதிவு
October 02, 2013 12:24 பிப


 
  அவள் அப்படி வீசிய அமில வார்த்தைகளிலிருந்து தப்ப முடியாமல் என் மனம் பொசுங்கி சாம்பலாகி காற்றில் பறந்தது,எனினும் ஏனோ அவளிடம் மன்னிப்பு கேட்க என் மனம் துடித்தது,உடனே அவள் பின்னால் ஓடினேன்,ஓடியவன் அவள்முன் சென்று தடுத்து நிறுத்தியதும்,

    "வழிய விடு....!" என்றாள்

    "ஸ்ரீ....,நான் ஏதோ தெரியாம....!எ....என்னை மன்னிச்சிடுங்க...."

    "எது....,மன்னிப்பா....,செய்றதெல்லாம் செஞ்சுட்டு மன்னிப்பு வேறயா..,நீ என்னை பத்தி எவ்வளவு கேவலமா நெனச்சுட்ட...?,இனிமேலும் உன்கூட பழக நான்  தயாரா இல்ல..,வழிய விடு"

   "ஸ்ரீ..அது,அது வந்து"

   "வழிய விடுடா....."

 இப்பொழுது அவளது குரலில் ஒருவித கோபம் கலந்திருப்பதை என்னால் உணரமுடிந்தது,அதற்கு மேல் அவளை காயப்படுத்த நான் விரும்பவில்லை,எனவே நானும் அவளிடமிருந்து விலகிவிடுவதுதான் நல்லது என்றெண்ணினேன்,பிறகு நடந்த அனைத்தையும் ஹரியிடம் கூறி அவரிடமிருந்து ஆறுதல் வார்த்தைகளை பெற்றுக்கொண்டேன்.

 அன்றிலிருந்து சரியாக ஒருமாதம் கழிந்து நான் நடந்த அனைத்தையும் மறந்துவிட்டு என் வேலையில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தேன்,வேலையும் நன்றாக போய்க்கொண்டிருந்தது,ஒருநாள் என் வேலை முடிவதற்கு நேரம் சற்று மிகையானது,ஸ்ரீயும் வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள்,மற்ற அனைவரும் அலுவலகத்தை விட்டு ஏற்கனவே வெளியேறியிருந்தனர்,மணி சரியாக 7.00 இருக்கும்,எனக்கு சோர்வு ஏற்படவே தேநீர் அருந்துவதற்காக வெளியே வந்தேன்,
கடைக்காரரிடம்,

  "அண்ணே ஒரு டீ..."

 என்று சொல்லிவிட்டு வானத்தையே வெறித்தவாறு அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்தேன்,அழகான இருள்சூழ்ந்த பகுதி,அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மின்னும் நட்சத்திரங்கள்,சில இடங்களில் பொலிவிழந்த நட்சத்திரங்கள்,அவற்றின் நடுவே வெண்மையை சிந்தும் நிலவு,நான் பார்த்ததால் ஓடி ஒளியமுயன்று தோற்று விழுந்த எரிநட்சத்திரம் என வானத்தின் அழகை பார்வையால் அளந்துகொண்டிருந்தேன்,அப்போது என் அருகில்

     "ப்ரதர் ஒரு டீ போடுங்க...."

 என்ற குரல் கேட்டு கவனம் கலைந்து அருகில் நோக்கினேன்,ஸ்ரீ நின்றுகொண்டிருந்தாள்,எனக்கு பழைய நினைவுகள் ஏற்பட்டு என் மனதை சோகத்தின் வாயிலுக்கு இழுத்துச்செல்ல முயன்றன,உடனே இருக்கையை விட்டு எழுந்து,

     "அண்ணே....,டீ கேன்சல்" என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன்,மெதுவாக நடந்து வந்து கேபினுக்குள் நுழைந்துகொண்டேன்,சிறிது நேரம் வேலையை பார்த்துக்கொண்டிருந்தேன்,பிறகு ஸ்ரீ என்னுடைய கேபினுக்குள் நுழைந்தாள் கையில் தேநீர்க்கோப்பையுடன்,அந்த கோப்பையை என் மேசைமீது வைத்துவிட்டு நகரமுயன்றவளை,

   "கொஞ்சம் நில்லுங்க....,என்னது இது..?"

   "ஆங்....,பாத்தா தெரியல..,டீ..."

   "அது தெரியுது...,அதை ஏன் இங்க கொண்டுவந்து வச்சிருக்கீங்க...?"

   "ஹேய்....,நீ இந்த ஆபீஸ்ல ஒரு ஸ்டாப்,ஏதோ ரொம்ப நேரம் வொர்க் பண்றியேன்னுதான் வாங்கிட்டு வந்தேன்,ஒழுங்கா குடிச்சிட்டு வேலையை பார்,இதைவெச்சி நான் உன்ன மன்னிச்சுட்டேன்னு மட்டும் தப்பா நெனச்சுறாத"

   
 அவள் அப்படி கூறியதும் எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது,நானும் என் வேலையை முடித்துவிட்டு கிளம்ப எத்தனித்தேன்,அப்பொழுதுதான்

  "எப்படி போவ...?" என்ற குரல் கேட்டு திரும்பினேன்,ஸ்ரீ நின்றுகொண்டிருந்தாள்,
எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது,"என்னடா இது,இனிமே நான் உங்கிட்ட வந்து பேசுனா செருப்பாலேயே அடி'ன்னு சொன்னவ,ஏன் இப்படி நடந்துக்குறா" என்று நினைத்துக்கொண்டு,

   "பஸ்லதான்..."

   "பஸ் போயிடுச்சு..."

   "பஸ் போனா என்ன?...,லிப்ட் கேட்டு போயிடுவேன்"

   "சரி....,வா...,நான் ட்ராப் பண்றேன்..."

   "பரவால்லீங்க உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்..."

   "ப்ச் அதான் சொல்றேன் இல்ல...,வா, வந்து வண்டியில ஏறு.."

   "என்னங்க ஆச்சு உங்களுக்கு.....?"என்று கேட்டதும் சிறிது நேரம் என் முகத்தையே அமைதியாக பார்த்தவள்,

   "ஹரி எல்லாம் சொல்லிட்டான் தினேஷ்" என்று ஆரம்பித்து நடந்த அனைத்தையும் துப்ப ஆரம்பித்தாள்,

  தினேஷ் ஹரியிடம் பிரச்சினையை விவரித்த பின்,ஹரி ஸ்ரீயிடம் சென்று உரையாடினார்,

   "ஸ்ரீ....."

   "ம்....,என்ன ஹரி சொல்லு..."

   "தினேஷ்....." என்று வாயெடுத்ததும்,

   "ஸ்டாப் இட் ஹரி,அவன பத்தி எங்கிட்ட பேசாத.."

   "புரிஞ்சிக்க ஸ்ரீ, அவன் ஒன்னும் வேணும்னு அப்படி சொல்லல,ஏதோ வாய்தவறி,அதுவும் உன்ன அவாய்ட் பண்றதுக்காக தெரியாம சொல்லிட்டான்.."

   இப்பொழுது ஸ்ரீ சற்று அதிர்ந்தாள்,

  "எ....என்ன,ஹரி சொல்ற?..,அவன் எதுக்கு என்ன அவாய்ட் பண்ணனும்..?"

  "எல்லாம் உன் ரேஞ்ச்தான் காரணம்,அதனாலதான்...,நீ அவன்கூட பழகுறத பார்த்து,நீ எங்க அவனை லவ் பண்ணிடுவியோன்னுதான் அவன் அந்தமாதிரி நடந்துக்கிட்டான்,மத்தபடி அவன் ரொம்ப நல்லவன்மா....."

 இப்படி அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டு ஸ்ரீயே தொடர்ந்தாள்,
 
   "சரி வா...,வந்து வண்டியில ஏறு..."

   நானும் அமைதியாக கேட்டுக்கொண்டு ஏறி வண்டியில் அமர்ந்துகொண்டதும்,ஸ்ரீ வண்டியை விரட்டினாள்,சரியாக ஒரு தேநீர் கடைக்கு முன்பாக வண்டி நின்றது,

  "தினேஷ்....,நீ எதும் தப்பா எடுத்துக்கலன்னா,ஒரு டீ சாப்பிடலாமா.."

  "இப்பதானங்க சாப்டீங்க..."

  "இல்ல.....,நீ கேன்சல் செஞ்சபிறகு,எனக்கு ஆர்டர் பண்ண டீய தான் உனக்கு எடுத்துட்டு வந்தேன்..."

  "அப்ப நீங்களும் சாப்பிடலையா..."

   "நீங்களுமா.....?,ஹேய்...,அப்ப நீயும் சாப்பிடலையா...?"

 "இல்ல நீங்க பேசுனதல.. நான் கொஞ்சம் அப்சட் ஆயிட்டேன் அதான்..."

  "அது.....,சும்மா.. நான் உங்கிட்ட வெளையாடுனேன்,சரி வா, போய் சாப்பிடலாம்" என்று அழைத்துச் சென்றாள்,இருவரும் தேநீரை வாங்கி அருந்திக்கொண்டிருக்கையில் ஸ்ரீயின் அழகிய கண்கள் என்னை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தன.நான் எதேச்சையாக அவள் கண்களை நோக்கிய போது,என் அனுமதியில்லாமல் என் கண்கள் அவள் கண்களுடன் கலந்து உறவாடின,  அந்த அழகிய ஊடலால் கட்டுண்டு எச்சில் விழுங்கிக்கொண்டிருந்த வேளையில், தேனில் நனைந்த மென்மையான பூவிதழைப்போன்ற இதழ்களை அசைத்து,மெல்லிய குரலில்..,

   "ஐ...,ஐ.....,ஐ லவ் யூ... தினேஷ்"

என்று கூறினாள்

 

                                                                                                                                                                                                                              -தொடரும்.