வெங்காயம்-தக்காளி-மசல‌

jillu
செப்டம்பர் 06, 2013 02:42 பிப

தேவையான பொருட்கள்

வெங்காயம்-5
தக்காளி-3
சாம்பார் மிளகாய்த்தூள்-தேவையான அளவு
கறிவேப்பிலை-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
கொத்தமல்லி இலை-தேவையான அளவு
பெருஞ்சீரகம்-1 ஸ்பூன்
பட்டை-தேவையான அளவு
லவங்கம்-தேவையான அளவு
இலை-தேவையான அளவு

தயாரிக்கும் முறை

முதலில் எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் பெருஞ்சீரகம், பட்டை, லவங்கம், இலை போட்டு தாளிக்க வேண்டும். பின்பு வெங்காயம், தக்காளி போட்டு எண்ணையிலேயே நன்றாக வதக்க வேண்டும். அதன்பிறகு சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு போட்டு கிளற வேண்டும். பின்பு எண்ணெய் மிதந்து வந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போட்டு இறக்கவும்.

உபயோகிப்பதை பொறுத்தது
5 முதல் 15 நிமிடங்கள்