தனி மரம் தோப்பாகாது!

தமிழ்
ஆகஸ்ட் 21, 2013 08:11 பிப

தனி மரம் தோப்பாகாது!

 

பல மரம் சேர்ந்து நின்றால் தான் அதை தமிழில் தோப்பு என்பார்கள். ஒற்றை மரத்தை தோப்பு என்று சொல்ல முடியாது. அது எப்போதுமே ஒற்றை மரமே. 

அதே போல சமூகத்தில் மனிதர்கள் சேர்ந்து வாழ்ந்தால் தான் அதை சமூகம் என்று சொல்ல முடியும். தனிமையாக வாழும் ஒருவரது வாழ்க்கை நிறைவு பெறாது. ஒற்றுமை குடும்பத்திலும் சமூகங்களிலும் மிக மிக அவசியமான ஒன்று. சமூகத்தில் ஒருவராக தனிமையில் முயற்சி செய்தால் அது பெரும் வெற்றி அடைவதில்லை. ஆனால் பலரும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தால் வாழ்வில் அவர்கள் பெரும் வெற்றி அடைந்துவிடுவார்கள்.