" சீதையின் சீற்றம் "

நாத்திகன்.
ஜூன் 16, 2013 06:39 பிப

 “சீதையின் சீற்றம்’’

 

       ராமன் அவளிடம் அப்படிக் கேட்டதும், அவளால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, அவளது மனது கரும்பு சக்கையைப் போல பிழியப் பட்டுக் கொண்டிருந்தது, வயிற்றுக் குளிருந்த அவளது குடல் வாய் வழியே வெளியே வந்து விழுந்து விடுவது போன்ற ஒரு குமட்டல்.

         அவள் நின்ற இடத்திலிருந்து மேலே பார்த்தாள், ஆகாயமும், பூமிப் பந்தும் ஒரே சமயத்தில் இரு வேறு திசைகளில் சுற்றுவது போல சுற்றிக் கொண்டிருந்தது, தலையை தனது இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டாள், அவள் மனம் நிலை கொள்ளாமல் பித்துப் பிடித்தது போல எங்கேங்கேயோ சென்றகொண்டிருந்தது.

            அப்படியொரு கேள்வி கேட்க நாம் என்ன தவறு செய்தோம் என்று முதலில் தம் பக்கமுள்ள தவறு என்னவென்று சிந்திக்கலானாள், கம்பன் எழுதிய காவியத்தை சீதை கண்ணுற்றாள் பின் கருத்துற்றாள்.

           சனகனின் ஏர் கொழுவிலிருந்து உருண்டு பிறந்ததிலிருந்து, உருண்டு திரண்டது வரை யோசித்து எங்கேயும் தவறு நடக்கவில்லை என்று வாதியும், பிரதி வாதியுமாக அவளேயிருந்து வாதித்து முடிவு செய்து, இந்த கால கட்டத்தில் தவறேதும் நிகழவில்லை என்று நீதிபதியாய் நின்று அவளே தீர்ப்பும் கூறினாள்.

           பின்பு கன்னியாகி காளையரின் கண்ணசைவு அவளை கட்டெரும்பு முய்ப்பது போல சுற்றிய போதும், சித்தம் கலங்காத அவள் மனம் பின், பூப்பெய்தியது முதல் புத்தகத்தின் பக்கங்கள் புரண்டோடுவது போல, புரியாத புதிராய் அவளது கன்னிப் பருவம் தொட்டு, முதிர் கன்னியானது வரை, அவளது பழைய நாட்கள் புரண்டோடின, அங்கேயும் தவறேதும் நிகழவில்லை என்று தனக்குள் முடிவு செய்தாள்.

              பின் சமுதாயத்தால் முதிர் கன்னியாக்கப் பட்டதை எண்ணி தன் எண்ணத்தை அசை போட்டாள், அங்கேயும் தன் தவறு ஒன்றுமில்லை, வில்லொடிக்க ஆள் வராததால் முதிர் கன்னியாகிப் போனதில் மூழ்கிப் போனாள் அங்கேயும் அவள் தவறு ஏதுமில்லை.

          அதன் பிறகு நிகழ்ந்த நிகழ்வுகளை நீதி தேவதையின் தராசில் நிறுத்தலானாள்.

         வந்தான் ஒரு வாலிபன், வனப்பு நிறைந்த தோலினன், ஆனினத்திலோர் ஆணழகன், அவள் இதுவரைக் கண்டிறாத ஆண்மகன், பார்வையாலேயே மங்கையரின் அங்கத்தை அளக்கும் அன்பாலன், அதை பங்கு போடத்தெரிந்த பங்காலன், அவள் அங்கத்தில் நிலையான பார்வையால் அவளை நிலைகுளையச் செய்து, வெட்கி தலைகுனியச் செய்த பண்பாலன், வேல் விழிப் பார்வையால் அவள் அங்கத்தில் வில்லெரிந்த வில்லாலன், அவன் பெண்களின் ரசிகர் மன்றத்தலைவன், அவன் பெயர் ராமன்.

         வந்தான், வில்லெடுத்தான் நான் ஏற்றினான். அவ்வளவு தான் அவள் வீழ்ந்து விட்டாள், ராமன் வில்லொடிக்க, காமன் எங்கிருந்தோ தொடுத்து விட்டான் அவள் மேல் கணை, காதலனைக் கண்டெடுத்து விட்டாள், கலிப்புற்றாள், காமுற்றாள், அவள் மணம் பூரித்து வெளிப்பட்டது எப்படியென்றால், அவள் “அல்குல்” விம்மிப் புடைத்ததில் அவள் அணிந்திருந்த மேகலை அறுந்து வீழ்ந்தது.

       அது இது

                       கோமுனி யுடன்வரு கொண்ட லென்றபின்

                       தாமரைக் கண்ணினா னென்ற தன்மையால்

                       ஆமவ னேன்கொலேன் றைய நீங்கினாள்

                       வாமமே கலையிற வளர்ந்த தல்குல்.

         அவள் எண்ணத்தராசு தவறு செய்த பக்கம் தாழ்ந்து போனதில், அவள் மனம் வீழ்ந்து போனது. வந்தவன் என்னதான் வருங்காலக் கணவனென்றாளும், திருமணத்திற்கு முன் அவன் மேல் காமுற்றது தவறு தான் என்று தண்டோரா போட்டது அவளது மனம். பின் மீண்டெழுந்து, மீட்டெடுத்தாள் தன் மீதமுள்ள நாட்களின் மிச்சத்தை, தன் மீது ராமன் உமிழ்ந்த எச்சத்தை, துடைத்தெடுக்கும் துணிச்சலெனும் துவளையைத் தேடினாள்.

         அவள் கடத்தப் பட்ட நாட்களில் அவள் மனம் சயனித்தது. ஒருவனின் சொந்த இடத்தில் அத்து மீறி நுழைந்து,வேள்வி என்ற பெயரில் உன் கலாச்சார சீரழிவைப் புகுத்த, தன் கலாச்சாரத்தில் வேறொருவனின் கலாச்சாரம் புகுவதைத்தடுக்க, தன் ஆட்களை ராவணன் அனுப்பி, வேண்டாம் இந்த விபரீதம், என்று தடுக்க நினைத்தவனை வெட்டி வீழ்த்தியது யாருடையக் குற்றம்…?

         அத்து மீரியவன் என்றும் பாராமல், தன் அன்பை, தன் காதலை உன்னிடம் வெளிப்படுத்திய பெண்ணின், மூக்கு, முலை, காதுகளை அறுத்து, அங்க கீனம் செய்தது, யாருடையக் குற்றம்…?

         இதையெல்லாம் பார்த்து, நீதி நெறி தவறாத அரசன் பெண்களை தெய்வமாய் வணங்கும் மாமன்னன், சத்தியம் தவறாத சாகசன், ஈசனுக்கு நிகராய் அழைக்கப் படும் இலங்கேசன் செய்த தவறென்ன…?

         என்னைக் கட்டியனைத்தானா…? அல்லது தொட்டுத் தான் தூக்கினானா…?

         உம் கம்பனிடமே கேளும் என்னைக் கவர்ந்து செல்கையில் கூட, கண்ணியம் தவறாது நடந்து கொண்டவனடாஇலாங்காதிபதி.

         என்னைக் கட்டியனைக்கவுமில்லை, தொட்டுத் தூக்கவுமில்லை, என் மேனியைத் தொடவுமில்லை, என் மேகலை அரவுமில்லை. என்னைக் கவர்ந்தவனின் எண்ணம் தவறானதாக இருக்கலாம் அவனது செய்கை தவறானது இல்லை, என் மேல் அவன் விரல் கூட அல்ல, அவன் மூச்சிக் காற்றுக் கூட என் மேனியில் படவேயில்லை.

           பூமியைப் பெயர்த்து என்னை மண்ணோடு மண்ணாகத் தூக்கிச் சென்ற மகானடா அவர்

          கயவனே நடத்தைக் கெட்டவளென்று யாரைக் கேட்கிறாய் கேள்வி, கற்பென்றால் என்னவென்று தெரியாத கோசலைக்குப் பிறந்தவனே, தந்தயின் பெயர் (குதிரையா…? முனிவனா…? என்று) கூடத்தெரியாத கசடனே.

          தன் மீது நம்பிக்கையில்லாதவன் தானடா, தன் தாரத்தின் மேல் சந்தேகப் படுவான், மனைவியை காப்பாற்ற முடியாமல் வேறோருவன் கடத்திச் செல்ல விட்டு விட்டு, உன்னைத்தவிர வேறு ஆடவனை என்னாது, உன் நினைவோடு மீண்டு வந்தவளிடம், என்ன கேட்கிறோம் என்ற அறிவு கூட இல்லாமல், என்ன வார்த்தையடா கேட்டாய், அப்படி கேட்ட நாவை அறுத்தெரிய வேண்டாமா…? என்ன வார்த்தையடா அது.

          நீ கற்புடையவளானால் தீயில் இறங்கு என்று உன் எண்ணதைக் கூறிவிட்டு ஊரைக் காரணம் கூறும் கபோதியே என்று கேட்க நினைத்து

         ச்சீ இவனிடம் இதையேல்லாம் கேட்பதா… ? போரில் கூட நேருக்கு நேராய் நின்று சண்டை போடும் ஆண்மையில்லாத, யுத்த நெறி தெரியாத இவனிடம், இதையெல்லாம் கேட்பதை விட தீயில் இறங்குவதே மேல் என்று எண்ணி “ சீற்றத்துடன் தீயில் பிரவேசித்தாள் சீதை.

                                                                                                                                                                                                                                                                        இவன்

                                                                                                                                                                                                                                                                அ.கு.அன்பரசன்.