பட்டினத்தார்

shivathavasi
ஜூன் 04, 2013 04:27 பிப
ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல நின்தாள் சதங்கச்சி யேகம்பனே!

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?

முன்னை எத்தனை எத்தனை சென்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்
இன்ன மெத்தனை யெத்தனை சென்மமோ?
என்செய் வேன்?கச்சியேகம்ப நாதனே?

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்துபட் டாடைசுற்றி
முத்தும் பவளமும் பூண்டோடி யாடி முடித்தபின்
செத்துக் கிடக்கும் பிணத்தரு கேயினிச் சாம்பிணங்கள்
கத்தும் கணக்கென்ன?காண் கயிலாபுரிக் காளத்தியே!