நெருப்புக்குள் தவம்...

முத்து பாலகன்
ஏப்ரல் 16, 2013 03:06 பிப
அன்பான தோழமைகளே...

"நெருப்புக்குள் தவம்" கவித்தொகுப்பு சில பகுதிகளோடு நின்றிருந்தது. இப்போது மீண்டும் தொடரும் ஆரம்பத்தில் இருந்தே...

உங்கள் ஆதரவுடன்..

அன்புடன்
முத்துபாலகன்
 
 
நெருப்புக்குள் தவம்...

பாகம்-1அறிமுகம்…

இது...

கருவறை துவக்கும்
கல்லறை முடிக்கும்
மானுடம் பிழைக்கும்
                         நெருப்புக்குள் தவம்...

விடுமுறை தவிர்க்கும்
மனத்துறை இயக்கம்
கடமையின் விருத்தம்
                        நெருப்புக்குள் தவம்...

கருமறைச் சுரக்கும்
தலைமுறை வளர்க்கும்
வாழ்வியல் சதுக்கம்
                        நெருப்புக்குள் தவம்...

உயிரினை உருக்கும்
உறவதன் பதக்கம்
உணர்வினில் கிளைக்கும்
                            நெருப்புக்குள் தவம்...

வாழ்வினில் நடக்கும்
வேள்விகள் அனைத்தும்
உரைத்திடத் தொகுக்கும்
                               நெருப்புக்குள் தவம்...