எழுதியவள் நீ தானே

முத்து பாலகன்
மார்ச் 31, 2013 05:41 பிப

இதயத்தின் ஓரத்தில்

இன்பங்கள் ஆயிரமாய்

எழுதியவள் நீ தானே

 

உயிருக்குள் உறவேந்தி

உதிரத்தில் பயிராகும்

உணர்வின் தன் மொழியாக

 

அழகுக்கு மாசைவரும்

இதழோரப் புன்னகையில்

துளியேந்தி வாழ்ந்திடவே

 

இசையொன்று சுதிகூட்டும்

இதயத்தின் மேடையிலே

புதிதாகத் தினந் தினமே

 

விழி வாசக் கவிதைகளும்

குளிரூட்டித் தாலாட்டி

அடிமையா யாக்கியதே

 

உலக மென் காலடியில்

உன் மடியிலிருந்தாலே

இது போது மென்னபே