ஈழத் தமிழ் உறவுகளுக்காக...

முத்து பாலகன்
மார்ச் 30, 2013 04:46 பிப
போதும் இந்தக் கல்லரைக் காவியங்கள்
வாழும் எந்தன் உள்ளுரைப் பாசங்கள்
வாழ உந்தன் நல்நிலை தேடியதால்
நாளும் கொண்டது வன்முறை வேர் விழவே


விடியலுக்காக விதைகளை யிட்டோம்
... மடிவதற்காக சிதைகளையல்ல…

கொடிகளில் பூக்கள் மலர்வது எல்லாம்
விழிகளில் கோக்கும் நீர் துளிக்கல்ல…

வழிகளைப் பார்த்து முட்புதர் நீக்கி
தடம் இடத்தானே தவறிட அல்ல…

நாளும் போர்குணம் வேர்விடா வாழ்வை
நாடும் என்பதை நினைப்பது நன்று…

வாழ்க்கைப் பக்கத்தில் குறுதியும் போதும்
வாழும் நம்பிக்கை அமைதியாய் வேண்டும்