இச்சிறியேனுக்குத் தடாகந் தந்த விருது இது

முத்து பாலகன்
மார்ச் 27, 2013 06:14 பிப
சொற் சுடரேற்றிய தமிழுக்கும்
சுவை யமுதூட்டிய கவிகளுக்கும்
அற்புத மாக்கிய தடாகத்திற்கும்
அடியேனின் நன்றி கலந்த வணக்கங்கள்

என்ன தகுதி கொண்டே
னென்றேனை நாடிய சிறப்பு
சின்னமெனச் சீர் வகுத்து
செங்கவியாய்த் தேரிழுத்து
நண்ணு மென நடனமுறும்
நடை தாங்கிய களிப்பு
தன்னுயிரும் தாங்குதலால்
தமிழுக்கே அதன் பொறுப்பு

பெருங்கவிகள் கூட்டத்திலே
சிறு குழந்தை மழலையிது
அருங்கவிகள் ஆலவட்ட
மருகினிலே கோலமிட
குறு நகையால் உளம் பறித்து
உவகை தரும் குழவியிவன்
விருந்தான தமிழுக்கு