விடையில்லா அடையாளங்கள்…2

முத்து பாலகன்
மார்ச் 27, 2013 06:06 பிப


வலிகளின் எழில்களில்
வாழ்ந்தது போதும்
உயிர்தனில் உரசிடும்
ஓய்விலாச் சாபம்
பதறிடும் பொறுமைகள்
கதறிட நோகும்
ஒருவரு மில்லாத்
தனிமையின் வேகம்
திணறிடத் திணறிடத்
தடையிலாத் தாளம்
எதற்கினி யிந்த
வாழ்க்கையின் பாரம்

இனிமைகள் தேடி
இளமைகள் போகும்
முதுமையில் நாளும்
வலி பலி போதும்
உரிமையும் கூடி
களி ஒளி சூடும்
இருள்களின் தூதாய்
மருள்களின் யாகம்
நெருப்பிறை நாட்கள்
நிறைப்பது ஏனோ
இருப்பது வேண்டாம்
இறப்பதே வேண்டும்
அழைத்திடு இறைவா…!!!