தயிர் பச்சடி

shashi srinivasan
மார்ச் 13, 2013 06:29 முப

தேவையான பொருட்கள்

பிஞ்சு புடலங்காய்

தயிர் தேவைக்கு

தேவையான உப்பு, கடுகு-உளுத்தம் பருப்பு தாளிதம், பெருங்காயம்

தயாரிக்கும் முறை

புடலங்காயை தயிர் பச்சடி செய்யலாம்.  எத்தனை பேருக்கு இது தெரியும் என்று எனக்குத் தெரியாது.  ஆனாலும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாம்.  

புடலையில் நீண்ட, அந்தக் கால புடலையே சுவை மிக்கது.  

அதில் நல்ல பிஞ்சாகப் பார்த்து வாங்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.  

அப்படியே பச்சையாக அதை தயிரில், மற்றவையான உப்பு, கடுகு-உளுத்தம் பருப்பு தாளிதம், பெருங்காயம் இவைகளுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.  

அரை டீஸ்பூன் சீரகத்தை எண்ணெய் விடாமல் வறுத்துக் கொண்டு, அதை நைஸாக பொடி செய்து பச்சடியில் சேர்க்கவும்.

சுவையானதும், ஆரோக்கியமானதுமான புடலங்காய் பச்சடி தயார்.

உபயோகிப்பதை பொறுத்தது
5 முதல் 15 நிமிடங்கள்