ஆத்ம ஞானம் என்றால் என்ன?

சேஷாத்ரி
மார்ச் 05, 2013 11:08 முப

ஆத்ம ஞானம்


ஆன்மீகத்தின் உயர் நோக்கமாக சொல்லப்படும் கருத்து யாதென்றால் பிறப்பு இறப்பு தளையறுத்து ஆத்மஞானம் பெற்று வீடுபேறு எய்துவதே என பல ஆன்மீக நூல்கள் உரைக்கின்றன. இதில் ஆத்மஞானம் என்பது என்ன என்று பல ஆன்மீக வல்லார்க்கு தெரிவதேயில்லை. வெறுமனே சடங்குகள் ஆற்றுவதும், வேள்வி இயற்றுவதும், உருவ வழிபாடு செய்வதும் இந்த ஆத்மஞானத்தைப் பெற்றுத்தராது, என்றால் மோட்சத்தை தராது என்று பொருள். அப்படியானால் இவை வெறும் காலக் கழிவும் பணச் செலவுமே ஏற்படுத்துகின்றன என்று சொல்லலாம். ஆத்மஞானம் என்றால் என்ன என்று ஆனந்த மூர்த்தி எனப்படும் பிரபாத் ரஞ்சன் சர்க்கார் விளக்குகிறார். விளங்கியவர் அதன்படி ஒழுகினால் பயன் அடையலாம்.          


"ஆத்மஞானமே ஞானமாகும்". ஆத்மஞானம் என்பது என்ன? தன்னறிவு என்றால் என்ன? தன்னையுணர்தல் என்றால் என்ன? இதோ பாருங்கள், ஒவ்வொரு வாழுயிரிக்கும் தன்னைக் காண்பதற்கல்லாமல் பிறரைக் காண்பதுவே பழகிப் போன இயல்பாக உள்ளது. இதாவது, எப்பொழுதெல்லாம் ஒருவர் அகம்நோக்கிய பொருளாக ஆகின்றாரோ அப்பொழுது அவர் பிறரை புறவயச் சரிஎதிர்ப் பகுதியாகக் கொள்கிறார், ஆனால் ஒருபோதும் தன்னை (ஆன்மாவை) புறவயச் சரிஎதிர்ப் பகுதியாகக் கொள்வதில்லை. ஒருவருடைய அகம்நோக்கிய நிலை ஒருபோதும் புறவயத் தன்மையோடு இணைவதில்லை என்பதுதான் தொந்தரையாக உள்ளது. நீங்கள் மிகப் பலவற்றை அறிய விரும்புகிறீர்கள் ஆனால் ஒருபோதும் உங்களை (ஆன்மாவை) அறிய விரும்புவதில்லை.

 

உமது "ஆன்மாவே" உமக்கு மிக நெருக்கமான பொருள் ஆகும், ஆயினும் நீங்கள் ஒருபோதும் உமது ஆன்மாவை அறிய விரும்புவதில்லை. அது தான் இங்கு இரங்கத்தக்கதாக உள்ளது, அது தான் இங்கு தொந்தரையாக உள்ளது. ஆத்மஞானம் என்பது காட்சிப்பொருளற்றதன்மையைக் கொண்ட  ஒரு நிலையை குறிக்கின்றது. அது, ஒருவர் தமக்குள்ளேயே ஒருவரது சொந்த ஆன்மாவையே பார்த்துக் கொண்டபடி வேறு எந்த புறவயத்தன்மை நோக்கிய அறிவுசார் அல்லது மனத்துக்குரிய செயல்திறனை வழிநடத்தாது இருப்பதாகும்.  

 

உங்களிடம் மனத்துக்குரிய செயல்திறன்கள் மிகப் பல உள்ளன. உங்களிடம் அறிவுசார் செயல்திறன்கள் கூட மிகப் பல உள்ளன, ஆயினும் நீங்கள் உமது மனத்துக்குரியதும் அறிவுசார்ந்ததுமான செயல்திறன்களைப் எப்போதும் பிற காட்சிப் பொருள்களிடத்தே தூண்டுவிட்டு அலைக்க முயல்கின்றீர்கள். ஆனால் உங்களுடைய மனத்துக்குரியதும் அறிவுசார்ந்ததுமான எல்லா செயல்திறன்களையும் ஒருக்கி (withdraw) இச்செயல்திறன்களை உமது ஆன்மாவை நோக்கித் தூண்டி வழிநடத்தி, அதோடு ஏதொரு காட்சிப் பொருளுலகோடும் தொடர்புகொள்ளாமல் அமைதியுடன் இருப்பீர்களானால் உங்கள் மனதினதும், ஆன்மாவினதுமான அந்த நிலையே, அந்த சார்பியல் நிலையே ஆத்மஞானமாகும். இதுவே மெய்யான ஞானமாகும் ஏனென்றால் பிற அறிவுகள் யாவும் சார்பியல்களால் மாசுபட்டுள்ளன.

 

இந்த ஞானம் ஏதொரு இரண்டாம் புறவயத்தன்மையை சாராததால் முழுமைப் பண்பு கொண்டதாக விளங்குகிறது, இதுவே ஆத்மஞானமாகும். இந்த ஆத்மஞானத்தைப் பெற ஒருவர் பல நூல் மடலங்களைப் படிக்கத் தேவையில்லை.

 

ஒருவர் இந்த ஆத்மஞானத்தை அடைய நேர்மையான உந்தவாவை வளர்த்துக்கொள்ளல் வேண்டும் அதோடு பரம்பொருளிடத்தில் அன்புறு பக்தியை வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.  இதுவே ஊழகம் (தியானம்) ஆகும். மேலும் இந்த செயன்முறையில், தன்னையுணதலுக்கு (ஆன்மஉணர்தலுக்கு) பின்னே ஒருவர் வீடுபேறு என்னும் மோட்சம் அடைகிறார். இதுவே சிவபெருமானின் மறுவுரையாகும். கீழே இந்த தமிழ் மொழிபெயர்ப்பின் ஆங்கில மூலம் உள்ளது.  

 

“Átmajiṋánam is jiṋánam”. What is átmajiṋánam? What is self-knowledge? What is self-realization? You see, it is the natural wont of each and every living being to see others, not to see himself. That is, whenever one becomes a subjective entity, he takes others as objective counterpart, but never the self as objective counterpart. One’s subjectivity never merges with objectivity and that is the trouble. You want to know so many things but you never want to know yourself. Your “self” is your nearest entity but you never want to know yourself. That is the pity, that is the trouble. Átmajiṋánam means a stage of objectlessness. Seeing one’s own self within oneself and not guiding any cognitive or psychic faculty towards any objectivity. You have got so many psychic faculties. You have got so many cognitive faculties, too but you always try to goad your psychic and cognitive faculties to other objects. But, if you withdraw all your psychic and cognitive faculties and goad these faculties towards yourself and be at peace without coming in contact with any objective world that phase of your mind and spirit that stance of relativity, is átmajiṋánam. It is the true jiṋánam because all other knowledges are contaminated by relativities. This jiṋánam, because of its non-dependence on any second objectivity is of absolute character and it is átmajiṋánam. For acquiring this átmajiṋánam one need not go through volumes of books. One should develop sincere urge to attain this átmajiṋánam and develop love for the Supreme. This is the sádhaná. And in this process, after self-realization, one attains salvation. This is the reply of Shiva. 


 By Ananda Murthy (alais) prabhat Ranjan sarkar, 30 September 1978, Patna. Published in: Ánanda Vacanámrtam Part 2, chapter: Agama and Nigama.

 


சேசாத்திரி