கடலைப் பருப்பு பாயசம்

Vijay
பிப்ரவரி 15, 2013 01:00 பிப

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு, வெல்லம் = தலா ஒரு கப்

பால் = 1/2 லிட்டர்

நெய் = 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் = 3 கப்

முந்திரி, பொடியாக நறுக்கிய தேங்காய் கீறல் = தலா 1/2 கைப்பிடி

தயாரிக்கும் முறை

செய்முறை:

பாலை கொதிக்க வைத்து நன்றாக சுண்ட காய்ச்சி வைத்து கொள்ளவும். வாணலியில் நெய்யை சூடாக்கி கடலைபருப்பை வறுத்து 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 2 விசில் வைக்கவும்.கடலைபருப்பு கொழகொழவென வேககூடாது. வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து மண் போக வடிகட்டி கொள்ளவும். எல்லாம் சேர்த்து கொதிக்கும் போது, பாலை விட்டு இறக்கவும். கடைசியில் முந்திரி, தேங்காய் கீறலை நெய்யில் வறுத்து போடவும்.
உபயோகிப்பதை பொறுத்தது
15 முதல் 30 நிமிடங்கள்