வராத வருணனும் அக்கினி குஞ்சுகளும்

chinnamb
ஜனவரி 17, 2013 02:38 பிப

வராத வருணனும் அக்கினி குஞ்சுகளும்
கூட்டிலே வாழும் குஞ்சுகள்
வானத்தை பார்த்து காத்திருக்கின்றன
தாயின் வருகைக்கு
வயிற்று பசி போக்கிட
நாட்டிலே வாழும் விவசாயியும்
வானத்தைத்தான் பார்க்கின்றான்
வருணன் வருவானா வயலின் பசி போக்கிடுவானோ?
அண்டை மாநிலத்தை பார்க்க வேண்டுமோ?
பாரதியின் அக்கினி குஞ்சுகளால் வெந்து தணிந்தது காடு
இந்த குஞ்சுகளால் என்னவாகும்?