ஜுகினி சூப்

Ganesh
ஜனவரி 14, 2013 12:25 முப

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்:

ஜுகினி – 1

ஸ்வீட் கார்ன் – 2 டேபிள் ஸ்பூன் (உதிர்த்தது)

பாதாம் பருப்பு – 8 முதல் 10 வரை

பூண்டு – 4 பற்கள் (விருப்பபட்டால்)(பொடியாக அரிந்து கொள்ளவும்)

மிளகுத் தூள் – 1 டீ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

அஜினோமோட்டோ – 1 pinch

வைட் சாஸ் செய்ய (white sauce ):

மைதா மாவு – 1 டேபிள் ஸ்பூன்

வெண்ணெய் (butter ) – 1 டேபிள் ஸ்பூன்

பால் – 1 கப்

தயாரிக்கும் முறை

செய்முறை :
ஜுகினி தூள் சீவி நறுக்கிக் கொள்ளவும்.
 
குக்கரில் 1 கப் தண்ணீர் விட்டு ஜுகினி, ஸ்வீட் காரன் மற்றும் பாதாம் பருப்பு போட்டு 3 விசில் விடவும்.
 
ஆறிய பிறகு பாதாம் - ன் தொலி நீக்கி, அனைத்தையும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
 
வாணலியில் வெண்ணெய் போட்டு, நறுக்கிய பூண்டு போட்டு வதக்கிய பிறகு மைதா போட்டு நன்கு வதக்கவும்.
 
மைதா நன்கு வதங்கிய பிறகு பால் விடவும். பால் கொதித்த பிறகு அரைத்த விழுது சேர்க்கவும். நன்கு கொதிக்க விடவும்.
 
சுவைக்காக 1 துளி அளவு (pinch) அஜினோமோட்டோ சேர்க்கவும்.
 
இதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்.
 
சுவையான ஜுகினி சூப் தயார்.