தாய்மை

Karthika
ஜனவரி 02, 2013 01:45 பிப
உன் வரவு அறியாமலே
உன்னை எதிர் நோக்குவாள்..

உன்னை ஏற்றுக் கொண்ட உடல்
உணவை ஏற்காமல் தவிப்பாள்..

உன் உடல் உருபெருமுன்
உன்னை காக்க தன்னையே பேணுவாள்

உன் உணவுக்கு அவள்
உதிரம் தந்து காப்பாள்

உன் உறக்கத்திற்கு அவள்
உறக்கம் தொலைத்து அணைப்பாள்

உன் தாயின் அருமை
உன் தாய்மையில் அறிவாய்....