ஏமார்ந்து போனேன்.........!!

mala31
டிசம்பர் 20, 2012 08:15 முப
விழித்திருக்கும் போதே விழி பிதிங்கி போனேன்...
அசைக்காமல் கண்களை அசைத்து போனேன்...
மனம் திறக்காமல் காத்திருந்தேன்.....
களவாடி சென்றவளின் பெயரையும் அறியாமலிருந்தேன்........!

நடக்கும் போதே மிதந்து போனேன்....
மறவாமல் சிரித்தும் போனேன்...
மீண்டும் அவள் வருவாள் என காத்திருந்தேன்...
ஈரைந்து திங்கள் கடந்து போயும்
அந்த ஒரு நொடி மறவாமல் இருந்து வந்தேன்......!

அவளோடு  வாழ்ந்திடவே நினைத்தேன்....
அழகிய மனை ஒன்றையும் எழுப்பினேன் ....
வளையலும் வாங்கினேன்; புடவையும் வாங்கினேன்....
தாலியும் வாங்கினேன் ; தங்க மோதிரமும் வாங்கினேன்....!

ஒரு நாள் அவளை சந்திப்பேன்....
என் ஆசையும் இனிதாய் கூறுவேன்...
அந்த நொடிக்குள் கலந்துபோனேன்....
அவளை எண்ணி  பித்தாய் போனேன்....!

இருபது வயதிலிருந்த நான் ஒரு மாமாங்கை கடந்து போனேன்....
எதிர்பாராமல் சலூன் மாமா கடையில் - அவளை
கண்டு திடுக்கிட்டு போனேன்....!

வளையலும் அணிந்திருந்தாள், பட்டு புடவையும் உடுத்திருந்தாள்.....
 தாலியும் கட்டிருந்தாள், தங்க மோதிரமும் போட்டிருந்தாள்...
கூடவே கையில் ஒரு குழந்தையும் வைத்திருந்தாள்.........!

ஒருகணம் அதிர்ந்து போனேன்....
காத்திருந்த நான் ஏமாந்து போனேன்....
கண்ணீர்  மலையில் கலந்து போனேன்...
கவலையோடு கண்களை நன்கு திறந்து பார்த்தேன்......

கட்டிலின் மேல் இருந்த நான்.........
       இப்பொழுது கட்டிலின் கீழே........!