ஆலமரம்

chinnamb
டிசம்பர் 17, 2012 10:54 முப
விழுதுகள் பலவானாலும்  மரம் ஒன்றே
சாதிகள் பலவானாலும் மனிதம் ஒன்றே 
அறியாத சில நாட்டாமைகள்
அமர்வதும் ஆல்  நிழலிலே

ஆலும்வேலும் பல்லுக்கு உறுதி 
பகன்ற்னர் சான்றோர்
அதனை அழித்து அமைக்கும்
ஆலைகளும் அகலச்சாலைகளும்
நாட்டுக்குறுதியா ?

ஆல் விழுந்தாலும்  விழதுகள்  வாழும்
அனைத்தையும் வெட்டினால்
நாடு வாழுமா?
வெட்டுவோர்  அறிவாரா  அங்கு சிந்துவது
இயற்கையின் குருதி என்று?

உணருங்கள் உங்கள் கோடாலிகள்
போடுகின்றன‌ ஒசோனில் ஓட்டை 
சில‌ நாட்டாமை தீர்ப்புகள்
கூறு போடுன்றன‌ நாட்டை