சீரக சாதம்

பிரியா
டிசம்பர் 16, 2012 10:17 பிப

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 2 கப்
சீரகம் - 2 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 4
பட்டை, கிராம்பு - சிறிது

தயாரிக்கும் முறை

குக்கரில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, பச்சைமிளகாய், சீரகம் போட்டு வதக்கவும்.
பிறகு அரிசியை போட்டு வதக்கி தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போடவும். 2 விசில் விட்டு இறக்கவும்.