கொள்ளு வடை

பிரியா
டிசம்பர் 15, 2012 12:07 பிப

தேவையான பொருட்கள்

கொள்ளு - 2 கப் ( 4 மணி நேரம் ஊறவைக்கவும்)
அரிசி மாவு - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4
சோம்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிது
உப்பு , எண்ணெய் - தேவைக்கேற்ப

தயாரிக்கும் முறை


கொள்ளை கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் அரிசி மாவு, வெங்காயம், சோம்பு, பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். இதை வடையாகத்  தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.