விடாது காதல் பாகம் - 17

Karthika
டிசம்பர் 14, 2012 09:55 முப

“எங்க ஃபிரண்ட்ஷிப் எல்லையையும் தாண்டி போயிருச்சு. ஆனா அப்படி எதுவும் நடக்க வேணாம் னு தான் நான் அவாய்ட் பண்றேன்.

அவன் மனசுலயும் என்ன இருக்குனு தெரியாம நானா ஏன் குழம்பனும்?? இதை அப்படியே விட்டுடலாம்.“

“ஆமா அவன் மனசுல ஒண்ணும் இல்லாம தான் உன்னை இந்த விரட்டு விரட்டுறானா?”

“என்ன டி முனங்குறா?”

“ஒண்ணு இல்ல ஜானு.. சரி .. இந்த விஷயத்துல யாரும் யாரையும் கம்பல் பண்ண முடியாது. பண்ணக்கூடாது.. உனக்கு தோணுறதை செய். சரி ராஜா மறுபடி கால் பண்ணினா என்ன சொல்லட்டும்.”

“ஏதாவது சொல்லு பவி. இனி நான் அவன் கூட பேச மாட்டேன் னு சொல்லு”.

“ஹிம்... உங்க ஜாலிக்கு என்னை கோலி ஆக்கி உருட்டுங்க.”

இரவு வரை ஜான்சியின் அழைப்புக்காக காத்திருந்த ராஜாவுக்கு ஏமாற்றமே. பவித்ரவை அழைத்து என்ன ஆச்சு என கேட்க அலைபேசியை எடுத்த போது மணி பத்தை தொட இருந்தது. இதற்கு மேல் கால் செய்வது நாகரீகமாக இருக்காது என்பதால் இளையராஜாவின் இன்னிசையை ஒலிக்க செய்து விட்டு படுக்கையில் வீழ்ந்தான்.

இருந்த அசதியில் எப்போது உறங்கி போனான் என்றே தெரியவில்லை.

மறுநாள் காலை வழக்கம் போல எழுந்து “குட் மார்னிங்” என்ற குறுஞ்செய்தியை தட்டி விட்டான்.

மறு முனையிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

ஏற்கனவே 2,3 நாட்கள் கல்லூரிக்கு விடுப்பு எடுத்து இருந்ததால் அவசர அவசரமாக கிளம்பி தன் இரு சக்கர வாகனத்தில் பறந்தான்.கல்லூரியை அடைந்த போதும் அவன் உடல் மட்டுமே உலவிக் கொண்டிருந்தது. மற்றபடி வகுப்பிலோ, நண்பர்களிடத்தோ நாட்டம் இல்லாமலே இருந்தான்.

வகுப்பு இடைவெளியின் போது பவித்ராவை அழைத்து ஜான்சியை பற்றி வினவ “இல்லை ராஜா . இனி அவ உன்கிட்ட பேச மாட்டாளாம். சொல்ல சொன்னா!”.

“ஏன் பவித்ரா ? நான் என்ன தப்பு பண்ணினேன்.?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது. இதை தான் அவ என்கிட்ட சொன்னா ராஜா”.

“என்ன செய்தேனு சொல்லாமலே இப்படி பண்ணினா எப்படி? சரி. அவ பண்றதுக்கு உங்களை தொந்தரவு பண்ணி என்ன ஆக போகுது. சாரி பவித்ரா.”

“தொந்தரவு எல்லாம் இல்லை ராஜா. பரவாயில்லை”

“அவ அட்டன் பண்ணாட்டியும் நான் அவளுக்கு கால், மெசேஜ் பண்ணிட்டே தான் இருப்பேனு சொல்லிடுங்க. அவளோட ரிலேசன்ஷிப் எனக்கு ரொம்ப முக்கியம். அப்படி எல்லாம் பாதில விட்டுட்டு போக முடியாதுணு சொல்லுங்க”.

“சரி சொல்றேன் ராஜா.”(கல்யாணத்துக்கு சாட்சி கையெழுத்து வரைக்கும் நம்மள விட மாட்டாணுக போலயே)

“ரொம்ப தாங்க்ஸ் பவித்ரா. டேக் கேர். பை”.

“பை ராஜா.”