பாரதிப் பாட்டனை வணங்குகின்றேன்

முத்து பாலகன்
டிசம்பர் 11, 2012 11:17 பிப
முண்டாசுப் பாட்டனின் மீசை முறுக்கினில்
முத்தமிழ் வித்தகம் முளைத்தது அழகாக
கொண்டாட்டம் போட்டிடும் கொஞ்சு தமிழுமே
கொள்கை பிடிப்புடன் கொண்டது அழகாக
சண்டாளச் சகதியாம் சாதி பேதங்களை
சாடியடித்தான் தமிழ் சாட்டையிலழகாக
திண்டாமைப் பேய்தனைத் தீய்த்து தகித்திடும்
தீந்தமிழ் தந்தான் தெய்வத்தின் குரலாக