பாரதி...

முத்து பாலகன்
டிசம்பர் 11, 2012 11:16 பிப
நேய நிறங்களில் பாயு மறங்களில்
வாழும் வளங்களை வாரி யளிப்போமே
நோயின் கரங்களில் நாடி சுவைத்திடும்
வீழும் மனத்தினை வாழ வைப்போமே
தாயின் தவத்தினை நாளும் உயர்த்திடும்
சேவை களத்தினை கூடி வளர்ப்போமே
தீயை மிதித்தெழும் தூய கருத்திலே
நேர்மை திறத்தினில் நீதி வளர்ப்போமே

ஆடி களித்தொரு ஆணந்தத் தாண்டவம்
ஆருயிர்க்கெல்லாம் அள்ளி கொடுப்போமே
தேடி தினந்தினம் தேவை யறிந்தொரு
சீரினையெல்லாம் செய்து கொடுப்போமே
பாடிப் பறந்திடும் ஞானக் குயில்களின்
பாதை தொடர்ந்துயர் பண்பு வளர்ப்போமே
வாடி வதங்கிடும் வாழுயிர்க் கெல்லாம்
வாழும் வகையினை வழங்கி மகிழ்வோமே